நரேந்திர தேவா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

நரேந்திர தேவா
Remove ads

ஆச்சார்ய நரேந்திர தேவா (Acharya Narendra Deva) (தேவ் அல்லது தியோ) (பிறப்பு: 1889 அக்டோபர் 30 - இறப்பு: 1956 பிப்ரவரி 19) இவர் இந்தியாவில் காங்கிரசு சோசலிசக் கட்சியின் முன்னணி கோட்பாட்டாளர்களில் ஒருவராவார். இவரது ஜனநாயக சோசலிசம் வன்முறை வழிமுறைகளை கொள்கை விஷயமாக கைவிட்டு சத்தியாகிரகத்தை ஒரு புரட்சிகர தந்திரமாக ஏற்றுக்கொண்டது.[1]

Thumb
1971இல் வெளியிடப்பட்ட இந்திய அஞ்சல் முத்திரையில் நரேந்திர தேவா
Thumb
1989இல் வெளியிடப்பட்ட இந்திய அஞ்சல் முத்திரையில் நரேந்திர தேவா
Remove ads

காங்கிரசில் தேவா

பால கங்காதர திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் செல்வாக்கின் கீழ் தேவ் முதன்முதலில் தேசியவாதத்திற்கு ஈர்க்கப்பட்டார். ஒரு ஆசிரியராக இவர் மார்க்சியம் மற்றும் பௌத்த மதத்தில் ஆர்வம் காட்டினார். இவர் இந்தி மொழி இயக்கத்திலும் தீவிரமாக இருந்தார். 1934இல் காங்கிரசு சோசலிசக் கட்சி நிறுவப்பட்டதிலிருந்து ஒரு முக்கிய தலைவராக இருந்த இவர் சுதந்திரப் போராட்டத்தின் போது பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சில சமயங்களில் உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 1951 திசம்பர் 6, முதல் 1954 மே 31 வரை பனாரசு இந்து பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றினார். நிர்வாக கவுன்சிலரும், மாநிலத்தின் முக்கிய கல்வியாளருமான நிர்மல் சந்திர சதுர்வேதி இவருக்கு உதவினார். பல்கலைக்கழக விரிவாக்கத்திற்கான பல திட்டங்களைத் தொடங்கினார்.

நரேந்திர தேவ் வறுமை மற்றும் சுரண்டலை ஒழிக்க வேண்டும் என்று மார்க்சிய பொருள்முதல்வாத இயங்கியல் மூலம் மட்டுமல்ல, குறிப்பாக தார்மீக மற்றும் மனிதநேய அடிப்படையில் வாதிட்டார். "சமூக ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் ஒரு மோசடி" என்று இவர் வலியுறுத்தினார். தேவ் விவசாயிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு அகில இந்திய கிசான் காங்கிரசின் தலைவராக பணியாற்றினார்.

இவர் சோசலிசக் கட்சியுடனும் அதன் வாரிசான பிரஜா சோசலிசக் கட்சியுடனும் 1956 இல் இறக்கும் வரை தொடர்பு கொண்டிருந்தார்.

Remove ads

ஆளுமை

பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார்: "ஆச்சார்ய நரேந்திர தேவ் இந்தியாவின் மிகப் பெரிய மகன்களில் ஒருவர். தேசம் அவருக்கு பெரும் கடன்பட்டிருக்கிறது." நரேந்திர தேவ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 1975 ஆம் ஆண்டில் இவரது நினைவாக பெயரிடப்பட்டது. தேவ் காசி வித்யாபீடத்தில் பேராசிரியராகவும், லக்னோ பல்கலைக்கழகம் மற்றும் பனாரசு இந்து பல்கலைக்கழக துணைவேந்தராகவும் இருந்தார். 1956 பிப்ரவரி 19 இல் சென்னையில் தனது 67 வயதில் இறந்தார்.  

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads