நர்த்தகி நடராஜ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நர்த்தகி நடராஜ் (Narthaki Nataraj), தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே அமைந்த அனுப்பானடி பகுதியில், பெருமாள் பிள்ளை - சந்திராம்மாள் இணையரின் பத்து குழந்தைகளில், ஐந்தாம் குழந்தையாக நடராஜ் எனும் பெயரில் பிறந்தவர். சிறு வயதில் தன்னில் பெண்மை இருப்பதை உணர்ந்த நடராஜ், பெண்களின் உடைகளை அணியத்துவங்கினார்.
இதனால் நடராஜ் தன்னை ஒத்த திருநங்கைத் தோழியான சக்தியுடன் இணைந்து, பத்மினி, வைஜெயந்திமாலா போன்றோரின் திரைப்படங்களை பார்த்து, தாங்களே நடனப் பயிற்சிகளை மேற்கொண்டனர். +2 வரை பள்ளிக் கல்வியை முடித்த நடராஜ், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக உதவி நடனப் பேரராசிரியராக பணி செய்தார். குருகுல முறையில் பரதநாட்டியம் கற்றுத் தேறினர்.[1] தஞ்சை நால்வர் வழிவந்த கே. பி. கிட்டா பிள்ளையிடம் நேரடியாக நடனம் கற்றவர்களில் இவரும் ஒருவர்.[2]
பின்னர் நர்த்தகி நடராஜ் எனும் பெயரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தமிழசைக் கலைஞர் என அறியப்பட்டார். இவர் தற்போது சென்னையில் வாழ்கிறார்.[3]
கடந்த 30 ஆண்டுகளாகளுக்கும் மேலாக பரதநாட்டியத்திற்கு தமது வாழ்வை அர்ப்பணித்துள்ள இவரது திறமையைப் பாராட்டி, இந்திய அரசு 2019-இல் பத்மஸ்ரீ விருந்து வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.[4][5]
Remove ads
சிறப்புகள்
- தமிழ்நாட்டில் திருநங்கை என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர்.
- கடவுச் சீட்டு பெற்ற முதல் திருநங்கை.
- தமிழ்நாடு அரசின் பதினொன்றாம் வகுப்பு தமிழ் பாடநூலில் நர்த்தகி நடராஜ் வாழ்க்கை பாடமாக உள்ளது.
- முதன் முதலில் மதிப்புறு முனைவர் மற்றும் கலைமாமணி விருது பெற்ற திருநங்கை.
- பல வெளிநாட்டுப் பல்கலைகழகங்களில் வருகை தரு பேராரசிரியராக பணி செய்கிறார்.
- தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.[6]
Remove ads
விருதுகள்
- பத்மஸ்ரீ - (2019) - இந்திய அரசு [5][7]
- மதிப்புறு முனைவர் - (2016) - தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்[8]
- கலைமாமணி - தமிழ்நாடு அரசு
- மியூசிக் அகாதெமியின் நிருத்திய கலாநிதி விருது 2021
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads