நவல்ராய் மணிக்கூண்டு கோபுரம், ஐதராபாத்து
பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகரமான ஐதராபாத்தில் அமைந்துள்ளது. From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவல்ராய் மணிக்கூண்டு கோபுரம், ஐதராபாத்து (Navalrai Clock Tower, Hyderabad) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தலைநகரமான ஐதராபாத்தில் அமைந்துள்ளது. காண்டா கர், சந்தை மணிக்கூண்டு கோபுரம் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.[1][2]
வரலாறு

நவல்ராய் மணிக்கூண்டு கோபுரம் 1914 ஆம் ஆண்டு இராபாத்தில் மீன் மற்றும் இறைச்சி சந்தையுடன் கட்டப்பட்டது.[3] அப்போது இப்பகுதியில் பணியிலிருந்த ஆட்சியரின் பெயர் இம்மணிகூண்டுக்கு சூட்டப்பட்டது.[2] சர் ராவ் பகதூர் திவான் சந்த் தயாராம் தலைவராக இருந்தபோது ஐதராபாத்து மாநகராட்சி ஆணையம் இந்த கோபுரத்தை கட்டியது. பி.சி ததானி என்பவரால் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.[1][2] கட்டுமானத்தின் போது பயன்படுத்தப்பட்ட கற்கள் தில்லியிலிருந்து இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.[1]
1990 ஆம் ஆண்டுகளில் கோபுரமும் அதன் மண்டபங்களும் புதுப்பிக்கப்பட்டன.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads