நவீன்-உல்-அக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவீன்-உல்-ஹக் மூரிட் (Naveen-ul-Haq Murid, பிறப்பு: 23 செப்டெம்பர் 1999) ஆப்கானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2016 செப்டெம்பர் முதல் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார்.[1]
Remove ads
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
நவீன் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை வங்காளதேசத்திற்கு எதிராக 2016 செப்டம்பர் 25 இல் விளையாடினார்.[2] 2019 ஆகத்தில், ஆப்கானித்தானின் பன்னாட்டு இருபது20 அணியில் 2019–20 வங்காளதேசத்தில் நடைபெற்ற மூன்று-நாடுகள் தொடரில் விளையாட்ச் சேர்க்கப்பட்டார்.[3][4] தனது முதலாவது இ20ப போட்டியை வங்காளதேசத்திற்கு எதிராக 2019 செப்டெம்பர் 21 அன்று விளையாடினார்.[5] 2021 செப்டம்பரில், 2021 ஐசிசி இருபது20 உலகக்கிண்ணச் சுற்றில் ஆப்கானித்தான் அணியில் சேர்க்கப்பட்டார்..[6] மே 2024 இல், 2024 இருபது20 உலகக்கிண்ணச் சுற்றில் விளையாடுவதற்காக ஆப்கானிய அணியில் சேர்க்கப்பட்டார்.[7]
Remove ads
ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
2023 உலகக்கிண்னப் போட்டிகளிக்குப் பிறகு நாவீன் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து பெறுவதாக அறிவித்தார்.[8]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads