நாகர்கோவில் மணிக் கூண்டு
நாகர்கோவிலில் உள்ள ஒரு மணிக்கூண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு என்றும் நாகர்கோவில் மணிக்கூண்டு என்றும் அறியப்படுவது நாகர்கோவில் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு மணிக்கூண்டு ஆகும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாகர்கோவிலுக்கு வந்த ஐரோப்பிய மிஷனரி அருட்திரு டதி என்பவரால், திருவிதாங்கூர் மஹாராஜாவிற்கு இந்த கோபுரத்தில் உள்ள கடிகாரம் வழங்கப்பட்டது. நாகர்கோவிலின் ஒரு முக்கிய அடையாளமான இது தற்போது புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இதை சாி செய்ய நிபுணர் இல்லாததால் இந்த கடிகாரத்தில் தற்போது மணி அடிப்பதில்லை.
Remove ads
வரலாறு
1893 இல் திருவாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாளின் வருகையின் நினைவாக நாகர்கோவிலின் மையப்பகுதியில் இந்த மணி மேடை கட்டப்பட்டது. இது இங்கிலாந்தைச் சார்ந்த ஹோஜியோர் எப் மற்றும் எஸ்.ஹோர்ஸ்லி அகியோரால் வடிவமைக்கப்பட்டது.[1] அந்த ஆண்டின் பிப்ரவரி 15 ம் தேதி மகாராஜா அதை துவக்கி வைத்தார். லண்டன் டெர்பிஷையரிலுள்ள, டெர்பி குழுமத்தின் கொல்லரால் கடிகாரத்தின் ஊசல் செய்யப்பட்டது. கடிகாரம், எடை தாங்கிய 60 அடி நீளமுள்ள சங்கிலியுடன் இணைத்து கப்பி மூலம் புவிஈர்ப்பு விசையால் இயக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் நாகர்கோவில் நகராட்சியால் மணி மேடையை வல்லுநர்களிடம் பழுதுபார்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்டது. புரவலரால் 2010 மற்றும் 2012 ல் இரண்டு முறை கோபுரத்தை ரூ. 4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தைச் சார்ந்த ரிச்சர்ட் எனும் தொழில்நுட்ப வல்லுநர் தான் பொதுவாக கடிகாரத்தை சரிசெய்வார். அவரது மரணத்திற்கு பிறகு கடிகாரம் மணியடிப்பதை நிறுத்திவிட்டது.[சான்று தேவை].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads