நாகாலாந்து மாநில அருங்காட்சியகம்

இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia

நாகாலாந்து மாநில அருங்காட்சியகம்map
Remove ads

நாகாலாந்து மாநில அருங்காட்சியகம் (Nagaland State Museum) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரமான கோகிமாவில் உள்ள பயாவு மலையில் அமைந்துள்ளது. நாகாலாந்தின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையால் அருங்காட்சியகம் இயக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் நாகாலாந்து முழுவதிலும் உள்ள பழங்கால சிற்பங்கள், பாரம்பரிய உடைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட கலைப்பொருட்களின் விரிவான தொகுப்பை சேகரித்து, பாதுகாத்து, காட்சிப்படுத்துகிறது. [1] அருங்காட்சியகம் முதன்முதலில் 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது [2] [3]

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

நாகாலாந்தின் கலை மற்றும் பண்பாட்டு இயக்குநரகத்தால் இயக்கப்படும் இரண்டு அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும்.

Remove ads

வரலாறு

கலை மற்றும் பண்பாட்டு இயக்குநரகம் (முன்னர் நாகா பண்பாட்டு நிறுவனம்) 1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய கவனம் நாகா மக்களின் வாழ்க்கை மற்றும் பண்பாட்டு ஆராய்ச்சிக்கான ஓர் ஆராய்ச்சி நூலகம் ஆகும். [2]

1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நாகாலாந்து மாநில அருங்காட்சியக கட்டிடம் கட்டப்பட்டது. இதில் இயக்குனரகமும் இருந்தது. 1970 [2] ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி, இனவரைவியல் காட்சியகம் கொண்ட இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு முறையாகத் திறக்கப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads