நிகம்போத் படித்துறை

இந்துக்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் இடம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிகம்போத் படித்துறை (Nigambodh Ghat) நிகம்போத் காட் எனவும் அறியப்படும் இது இறுதிச் சடங்குகள் நடைபெறும் ஒரு இடமாகும். இது தில்லியில் யமுனை ஆற்றின் கரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையின் பின்புறத்தில் தில்லி வட்டச் சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள குளியல் அறைக்கு ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் வரவழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் இறந்த உடல்கள் எரிக்கப்படுவதில் பரபரப்பாக இருப்பதற்கு பெயர் பெற்றது. இங்கு 1950 களில் ஒரு மின்சார தகன மேடை கட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் தகன வசதிகளை நிர்வகிக்கும் மாநகராட்சியால் அமுக்கப்பட்ட இயற்கை எரிவளி மூலம் இயங்கும் தகனமும் சேர்க்கப்பட்டது.[1][2]

விரைவான உண்மைகள் நிகம்போத் படித்துறை, அமைவிடம் ...
Remove ads

சொற்பிறப்பியல்

மகாபாரதத்தின் போது இந்தப் படித்துறையில் இந்துக் கடவுள் பிரம்மன் குளித்து, தனது இழந்த நினைவகத்தையும் புனித புத்தகங்களையும் மீட்டெடுத்ததாக நம்பப்படுகிறது. எனவே நிகம்போத் (அதாவது அறிவை உணர்ந்தது) என்று பெயர் வந்தது.

கண்ணோட்டம்

இந்திரப்பிரஸ்தத்தின் மன்னரான மூத்த பாண்டவ சகோதரர் இளவரசர் தருமனால் இந்தப் படித்துறை நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. தற்போது, இப்பகுதி தில்லியின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான தகன மைதானத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கு இந்க்களுக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நீலி சாத்ரி கோயில் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது சுவர்களின் நகரமான பழைய தில்லியில் முகலாயப் பேரரசு காலத்தில் போது கட்டப்பட்டது.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads