நிக்கி ஹேலே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிக்கி ஹேலே ('Nimarata Nikki Haley) (பிறப்பு:சனவரி 20, 1972)[2][3][4]) ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் பெண் அரசியல்வாதிவாதி ஆவார். இவர் 2011 முதல் 2017 முடிய தெற்கு கரோலினா மாநிலத்தின் 116வது ஆளுநராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதராக சனவரி 2017 முதல் டிசம்பர் 2018 வரை பணியாற்றினார். இவர் இந்திய வம்சாவளி அமெரிக்கர் ஆவார்.[5]
ஐக்கிய அமெரிக்க நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தின் பாம்பெர்க் நகரத்தில் பிறந்த நிக்கி ஹேலே கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பாடத்தில் இளநிலை பட்டப் படிப்பை முடித்தார். இவர் தந்தை நடத்தி வந்த துணி வணிகத்தில் ஈடுபடுவதற்கு முன்னர், பெண் வணிக உரிமையாளர்களின் தேசிய சங்கத்தின் பொருளாளர் மற்றும் தலைவர் பதவிகளை வகித்தார்.
2004ல் தெற்கு கரோலினா மாகாண பிரதிநிதிகள் அவைக்கு இவர் முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டார். இப்பதவியில் மூன்று முறை வகித்தார். மூன்றாவது முறை பதவி வகித்த போது 2010 மற்றும் 2014ல் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் வெற்றி பெற்றார். நிக்கி ஹேலே, தெற்கு கரோலினா மாகாண முதல் பெண் ஆளுநர் ஆவார். 2017ல் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் பணியாற்றிய ஒரே இந்திய அமெரிக்கர் நிக்கி ஹேலே ஆவார்.[6]
2024 ஐக்கிய அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் நிக்கி ஹேலே குடியரசுக் கட்சியின் வேட்பாளராக பிப்ரவரி 2023ல் தேர்வு செய்யப்படுள்ளார்.[7]
Remove ads
இளமை வாழ்க்கை மற்றும் கல்வி
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த சீக்கிய பெற்றோரான பேராசிரியர் அஜித் சிங் ரந்தாவா - ராஜ் கௌருக்கு 20 சனவரி 1972 அன்று தெற்கு கரோலினா மாநிலததின் பாம்பெர்க் நகரத்தில் நிக்கி ரந்தாவா பிறந்தார்.[2][3][8][9][10][11]நிக்கி ஹேலேவிற்கு ஒரு சகோதரி மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பள்ளிப்பருவத்தில் கணக்கியல் பாடத்தை தனது தாயார் மூலம் கற்றுக் கொண்டார்.[12] 1989ல் பள்ளிக்கல்வியை முடித்த நிக்கி ஹேலே கிளம்சன் பல்கலைக்கழகத்தில் 1994ம் ஆண்டில் கணக்கியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார்.[13][14][15]
Remove ads
அரசியல் வாழ்க்கை
தெற்கு கரோலினா ஆளுநர் (2011–2017)

14 மே 2009 அன்று நிக்கி ஹேலே, குடியரசுக் கட்சி சார்பாக தெற்கு கரோலினா]] மாகாண ஆளுநர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.[16] Haley had been persuaded to run by incumbent governor and fellow Republican Mark Sanford.[17] [18][19][20]
குடியர்சுக் கட்சியின் ஆளுநர் வேட்பாளர்களில் நிக்கி ஹேலே 49% வாக்குகள் பெற்று, 22 சூன் 2010 அன்று குடியரசுக் கட்சியின் தெற்கு கரோலினா ஆளுநர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.[21][22]
2 நவம்பர் 2010 அன்று நடைபெற்ற தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் நிக்கி ஹேலே ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வின்செண்ட் சிஹீனை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[23]அமெரிக்க சிறுபான்மை வகுப்பின ஆளுநர்களில் நிக்கி ஹேலே மூன்றாவதாக கருதப்படுகிறார்.[24]
Remove ads
இரண்டாம் முறை ஆளுநராக

12 ஆகஸ்டு 2013 அன்று நிக்கி ஹேலே, 2014ம் ஆண்டிற்கான தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் வேட்பாளாராக குடியரசுக் கட்சியின் சார்பாக இரண்டாம் முறையாக தேர்வ் செய்யப்பட்டார்.[25][26][27] குடியரசுக் கட்சியின் வின்செண்ட் சீகீன் இவருக்கு எதிராக வேட்பாளர் போட்டியில் இருந்தார். இருப்பினும் 4 நவம்பர் 2014 அன்று நடைபெற்ற தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் தேர்தலில் நிக்கி ஹேலே 41 முதல் 56% வாக்குகள் வரை பெற்று வெற்றி பெற்றார்.[28]
2024 அதிபர் தேர்தல் வேட்பாளராக
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் நிக்கி ஹேலே மற்றும் டோனால்ட் டிரம்ப் துவக்க நிலை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.[29]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
