நிசாத் கட்சி

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிசாத் கட்சி (Nishad Party) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சஞ்சய் நிசாத் என்பவரால் 2016-ஆம் ஆண்டில் மாநில அளவில் துவக்கி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். "Nirbal Indian Shoshit Hamara Aam Dal" என்பதன் சுருக்கமே நிசாத் ஆகும். இந்த அரசியல் கட்சி நிசாதர்கள் எனும் வேட்டைச் சமூகத்தினர், கெவாட் மக்கள், பிந்த மக்கள், மல்லா, காசியப், மாஞ்சி, கோண்ட் மற்றும் ஆற்றை நம்பி, குறிப்பாக மீன் பிடித்தல், படகு ஓட்டும் தொழில்கள் செய்யும் இதர சமூகத்தினரின் அரசியல், கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக நிசாத் கட்சி துவக்கப்பட்டது. இதன் நிறுவனத் தலைவர் சஞ்சய் நிசாத், முன்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தவர்.

விரைவான உண்மைகள் நிசாத் கட்சி, தலைவர் ...

நிசாத மக்கள் முன்னர் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளில் பங்கு கொண்டவர்கள்.[1][2][3][4]

நிசாத் கட்சி, அப்னா தளம் மற்றும் ஜன் அதிகார் கட்சிகளின் கூட்டணி 100 வேட்பாளர்கள் 2017 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். [2]நிசாத் கட்சி கியான்பூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads