நிஜாமுதீன் தர்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிஜாமுதீன் தர்கா (Nizamuddin Dargah, Urdu: نظام الدّین درگاہ , இந்தி: निज़ामुद्दीन दरगाह) என்பது சூபி ஞானி ஹசரத் நிஜாமுதீன் (1238 - 1325 CE) அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் ஆகும். இது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள தெற்கு தில்லி மாவட்டத்தில் மேற்கு நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. நிஜாமுதீன் தர்காவில் வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.[1] இந்திய இசையமைப்பாளரும், கல்விமானும் புலவருமான அமீர் குஸ்ராவ் நினைவிடமும் நிஜாமுதீன் தர்கா வளாகத்திலேயே அமைந்துள்ளது.[2]

Remove ads
நிஜாமுதீன்

ஹசரத் நிஜாமுதீன் அவுலியா அவர்கள் பெயரால் தெற்கு தில்லி மாவட்டத்தில் நிஜாமுதீன் பகுதிக்கு பெயரிடப்பட்டது. நிஜாமுதீன் வட்டாரம் நிர்வாக வசதிக்காக மேற்கு நிஜாமுதீன், கிழக்கு நிஜாமுதீன் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.மேற்கு நிஜாமுதீன் பகுதியில் புகழ்பெற்ற ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் உள்ளது.
தப்லீக் ஜமாஅத் தலைமையிடமான நிஜாமுதீன் மர்கஸ் மசூதி தர்காவின் அருகில் உள்ளது.[3]
Remove ads
கவ்வாலி பாடல்கள்
பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில் கவ்வாலி பாடல்கள் மிகவும் பிரபலம். தில்லியில் உள்ள ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவில் வியாழக்கிழமை மாலையில் சூபி கவ்வாலி பாடல்கள் பாடப்படுகின்றன.[4]
சந்தனக்கூடு
ஆண்டு தோறும் இசுலாமிய நாட்காட்டியின்படி ரபியுல் அவ்வல் மாதம் 17 ம் தேதி அன்று ஹஜ்ரத் நிஜாமுதீன் அவ்லியா அவர்களின் தர்கா கந்தூரி மற்றும் சந்தனக்கூடு நடக்கும்.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads