நியூ எம்பயர் திரையரங்கம் (கொல்கத்தா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியூ எம்பயர் திரையரங்கம் (New Empire Cinema) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவின் உள்ள நியூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஹுமாயூன் பிளேஸில் அமைந்துள்ள ஒரு ஒற்றைத் திரை திரையரங்கு ஆகும்.[1] இந்த திரையரங்கம் லைட்ஹவுஸ் திரையரங்கத்திற்கு அருகில் உள்ளது.
Remove ads
வரலாறு
நேபாள உள்துறை அமைச்சராக இருந்த மேஜர் ஜெனரல் சம்ஷர் ஜங் பகதூர் ராணா, கொல்கத்தாவில் (அப்போதைய கல்கத்தா) 45 சொத்துக்களை வாங்கினார். நியூ எம்பயர் திரையரங்கம் அவற்றில் ஒன்றாகும். நியூ எம்பயர் கலை அரங்கம் 1932-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்தத் திரையரங்கின் தலைமை வடிவமைப்பாளர் கட்டிடக் கலைஞர் ஏ. டி போயிஸ் ஷ்ரோஸ்ப்ரீ ஆவார். அந்த நேரத்தில் இந்தக் கலையரங்கம் பாலேக்கள் மற்றும் நாடகங்களை நிகழ்த்த பயன்படுத்தப்பட்டது. யெஹுதி மெனுஹின், ஜூபின் மேத்தா, உதய் சங்கர், அமலா சங்கர், போஹூருபீ (சோம்பு மித்ரா மற்றும் திரிப்தி மித்ரா போன்ற பிரபல கலைஞர்கள் இந்தத் திரையரங்கில் பாடியுள்ளனர். 1932 ஆம் ஆண்டில் இந்திய நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் இங்கு நதிர் பூஜா என்ற நாடகத்தை இயக்கினார்.[2]
1950-களின் முற்பகுதியில் நாடக நிகழ்ச்சிகளுடன் திரைப்படங்களும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. 1950களின் பிற்பகுதியில் இது ஒரு முழுமையான திரையரங்கமாக மாற்றப்பட்டது. வி. சாந்தாராம் தலைமையில், முதல் சர்வதேச புதிய இளைஞர் திரைப்படம் இந்த அரங்கில் நடைபெற்றது.
Remove ads
தற்போதைய நிலை
இதன் அருகிலுள்ள கட்டிடம் லைட்ஹவுஸ் திரையரங்கம் ஆகும், இது 2002-ஆம் ஆண்டில் மூடப்பட்டது, இருப்பினும், நியூ எம்பயர் திரையரங்கம் இன்னும் செயலில் உள்ளது. தற்போது, திரையரங்கின் இருக்கை 1000 இருக்கைகள் ஆகும். தியேட்டர் நிர்வாகம் டோமினோஸ், கே. எஃப். சி, பாரிஸ்டா போன்ற சில உணவுக் கடைகளை நடத்தி வருகிறது, இது அவர்களுக்கு நிதி நிலைத்தன்மையைப் பெற உதவுகிறது.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads