நியூ கினி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியூ கினி (New Guinea, பிசின மொழி: Niugini, டச்சு: Nieuw-Guinea) என்பது கிறீன்லாந்துக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். இதன் நிலப்பரப்பு 786,000 கிமீ2. அமைதிப் பெருங்கடலின் தென்மேற்கே, மலாயு தீவுக்கூட்டத்தின் கிழக்கே அமைந்துள்ளது. புவியியல் ரீதியாக ஆஸ்திரேலியாவின் அதே கண்டத்தட்டிலேயே நியூ கினி தீவும் உள்ளது. இங்கு உலகின் எட்டு கொடுமுடிகளில் ஒன்றான 4,884 மீட்டர் உயரம் கொண்ட புன்சாக் ஜெயா மலை உள்ளது.
தற்போது டொரெஸ் நீரிணையில் இருந்து கடைசிப் பனிக்காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் இது ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் இருந்து பிரிந்தது.[1]. மானிடவியல் அணுகுமுறையில், நியூ கினி மெலனீசியாவின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அரசியல் ரீதியாக, இத்தீவின் மேற்குப் பகுதி இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தைக் கொண்டுள்ளது. இத்தீவின் கிழக்குப் பகுதி பப்புவா நியூ கினி நாட்டின் பெரும்பாகத்தைக் கொண்டுள்ளது. நியூ கினித் தீவின் மொத்த மக்கள் தொகை 7.5 மில்லியன் (மக்கள்தொகை அடர்த்தி: 8 நபர்/கிமீ2).
Remove ads
வரலாறு
16ம் நூற்றாண்டில் எசுப்பானிய நாடுகாண் பயணிகள் இத்தீவை முதன் முதலில் கண்டுபிடித்து, Nueva Guinea என்ற பெயரில் அழைத்தார்கள். அண்மைக் கால வரலாற்றில் நியூ கினியின் மேற்குப் பகுதி டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் குடியேற்ற நாடுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. செருமானியர்கள் முதலாம் உலகப் போரிற்கு முன்னர் இத்தீவின் கிழக்குப் பகுதியின் வடக்குக் கரையைக் கைப்பற்றி செருமானிய நியூ கினி எனப் பெயரிட்டனர். அதே வேளையில், தென்கிழக்குப் பகுதியை பிரித்தானியா கோரியது. வெர்சாய் ஒப்பந்தத்தை அடுத்து, செருமானியப் பகுதி ஆஸ்திரேலியாவிற்குக் கொடுக்கப்பட்டது. கிழக்குப் பகுதி 1975 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்று பப்புவா நியூ கினி என்ற தனி நாடானது. தீவின் மேற்குப் பகுதி 1961 ஆம் ஆண்டில் டச்சுக்களிடம் இருந்து விடுதலை பெற்றது, ஆனாலும் இது உடனடியாகவே சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் இந்தோனேசியாவின் பகுதியாக ஆக்கப்பட்டது.[2]
Remove ads
இதனையும் காண்க
- மேற்கு பப்புவா, இந்தோனேசியாவின் மாகாணம்
- மேற்கு நியூ கினி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads