நிறுமச் செயலர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஒரு நிறுமச் செயலர் தனியார் துறை அல்லது பொதுத்துறை நிறுவனத்தில் மூத்த பதவியில் உள்ளவர் ஆவார். ஐக்கிய அமெரிக்க மற்றும் கனேடிய நாடுகளில், பொதுப்பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், ஒரு நிறுவனத்தின் செயலர் பொதுவாக ஒரு பெருநிறுவனச் செயலர் என்றும் அழைக்கப்படுகிறார். ஒரு நிறுவனத்தின் திறமையான நிர்வாகத்திற்கு நிறுவனத்தின் செயலர் பொறுப்பேற்கிறார். குறிப்பாகச் சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு நிறுவனம் கட்டுப்படுவதை உறுதி செய்வதற்கும், இயக்குநர்கள் குழுவின் முடிவுகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் அவர் பொறுப்பேற்கிறார்.[1]

ஒரு நிறுமம் தொடர்புடைய சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை நிறுமத்தின் செயலர் உறுதிசெய்கிறார். மேலும், குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் சட்டப் பொறுப்புகள் குறித்துத் தெரியப்படுத்துகிறார். நிறுமச் செயலாளர்கள் சட்ட ஆவணங்களில் நிறுமத்தின் பெயரிடப்பட்ட பிரதிநிதி ஆவார். மேலும், நிறுமம் மற்றும் அதன் இயக்குநர்கள் சட்டத்திற்குள் செயல்படுவதை உறுதி செய்வது அவர்களின் பொறுப்பாகும். பங்குதாரர்களுடன் பத்திரங்களைப் பதிவுசெய்து தொடர்புகொள்வதும், ஈவுத்தொகை செலுத்தப்படுவதை உறுதி செய்வதும், இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்களின் பட்டியல்கள் மற்றும் ஒராண்டின் கணக்குகள் போன்ற நிறுமத்தின் பதிவுகளைப் பராமரிப்பதும் நிறுமச் செயலாளரின் பொறுப்பாகும்.

Remove ads

இந்திய நிறுமச் செயலர்

இந்தியாவில், "இந்திய நிறுமச் செயலர்கள் நிறுவனம்" (ஐசிஎஸ்ஐ)[2]நிறுமச் செயலாளர்களின் தொழிலை ஒழுங்குபடுத்துகிறது. ஐ.சி.எஸ்.ஐ என்பது ஒரு சட்டரீதியான தொழில்முறை அமைப்பாகும். இந்நிறுவனம் 50,000 க்கும் மேற்பட்ட இணை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பணியமர்த்தப்பட்ட பட்டய செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் மற்றும் நிர்வாகமற்ற இயக்குநர்கள், நிர்வாகிகள் மற்றும் நிறுமச் செயலர்கள் என இந்நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். சில பட்டயச் செயலர்கள் தங்கள் சொந்த நிறுமங்களில் பெருநிறுவனச் செயலக நிர்வாகிகள் அல்லது மேலாளர்கள் அல்லது பெருநிறுவனச் செயலக இயக்குநர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

வட அமெரிக்கப் பொது நிறுவனங்களின் பல பெருநிறுவனச் செயலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சிலர் தங்கள் நிறுமத்தில் பொது ஆலோசகராகப் பணியாற்றுகிறார்கள்[1].இது அவர்களின் கடமைகளை நிறைவேற்ற உதவியாக இருக்கும். இருப்பினும், ​​சட்ட ஆலோசனை என்பது என்ன?, சலுகையால் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? மற்றும் வணிக ஆலோசனை என்ன என்பதில் இது தெளிவின்மையை உருவாக்கும்.[1]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads