நுகத்தடி

From Wikipedia, the free encyclopedia

நுகத்தடி
Remove ads

நுகத்தடி அல்லது மேக்கால் எனப்படும் இது ஏர், மாட்டு வண்டி, எண்ணெய் செக்கு, வயல் பறம்படிதல் முதலிய கருவிகளில் எருதுகளை பூட்ட பயன்படும் நீளமான தடி ஆகும்.[1][2][3]

Thumb
ஒற்றை மாட்டு வண்டி, மாட்டின் கழுத்தில் நுகத்தடி

அமைப்பு

பொதுவாக இது நேராகவோ அல்லது இடையில் வளைவுடனோ ஒற்றை அல்லது இரெட்டை எருதுகள் பூட்டும்படியாக வடிவமைக்கபட்டிருக்கும். மாடுகளை நுகத்தடியில் கயற்றினாள் பூட்ட இரண்டு அல்லது நான்கு துளைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒற்றை மாட்டு நுகத்தடியின் இரு பக்கங்களிலும் இரு நுகக்கால்கள் (நீளமான மரத்தடி) கொண்டு ஏர், வண்டி போன்ற கருவியுடன் இணைக்கலாம். இரெட்டை மாட்டு நுகத்தடியின் நடுவில் ஒரு நுகக்கால் கொண்டு ஏர், வண்டி போன்ற கருவியுடன் இணைக்கலாம். நுகத்தடியையும் நுகக்காலையும் இணைக்க நுகத்தாணி எனும் அச்சு பயன்படுகிறது.

Remove ads

பயன்

எருதின் இழு விசை வீணாகாமல் ஒருங்கிணைத்து நுகக்கால் வாயிலாக குறிப்பிட்ட கருவிக்கு மாற்ற உதவுகிறது. எருதின் கழுத்தின் மேல் பகுதியில் நுகத்தடி அமர்வதால் எருதின் குரல்வளைக்கு தீங்கு நேராதவாறு அதன் விசையை மட்டும் பயன்பாட்டுக்கு வழங்குகிறது. எருது, மாடு மட்டுமல்லாது குதிரை போன்ற இழுவைத்திறன் கொண்ட மிருகங்களையும் பூட்ட இது உதவும்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads