பஞ்சோபசாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனிதன் வாழ்விற்கு அடிப்படை ஆதாரங்களாக விளங்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனும் ஐந்து வசதிகளை வழங்கிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வழிபாட்டில் தாங்கள் வணங்கும் கடவுளுக்கு ஐந்து விதமான செயல்களைச் செய்கின்றனர். இது பஞ்சோபசாரம் எனப்படுகிறது. [1]
அவை
- சுவாமி சிலை அல்லது படத்துக்கு சந்தனமிடுதல்
- பூக்கள் கொண்டு பூசித்தல்
- தீபமேற்றிக் காட்டுதல்
- தூபம் போடுதல்
- நைவேத்தியம் (உணவு) படைத்தல்
-இவற்றில் சந்தனமிடுதல் நிலத்தையும் (பிருதிவி தத்துவம்) , பூக்கள் போட்டு அர்ச்சனை செய்வது ஆகாயத்தையும், தீபம் காட்டுதல் நெருப்பையும், தூபமிடுதல் வாயுவையும், உணவு படைத்தல் நீரையும் குறிக்கிறது.
Remove ads
சைவ சமய பஞ்ச உபசாரங்கள்
சைவ சமய முழுமுதல் இறைவனான சிவபெருமானுக்குச் செய்யும் உபசாரங்கள் ஐம்பெரும் பூதங்களை குறிப்பதாகவும், ஒவ்வொரு பூதத்திற்கும் ஐந்துவித உபசாரங்களை கொண்டதாகவும் அமைகின்றன.
நிலம்
பிருதிவி என்ற நில சம்பந்தமான உபராசங்கள்: சந்தனம், புஷ்பம், கிழங்கு, வேர், பழம், அன்னம் முதலானவைகளாம்.
நீர்
அப்பு என்ற நீர் சம்பந்தமான உபசாரங்கள்: சலம், பால், தயிர், கோஜலம், வஸ்திரம் முதலியவைகளாம்.
நெருப்பு
அக்னி என்ற நெருப்பு சம்பந்தமான உபசாரங்கள்: பொன், இரத்தினம், தீபம், கற்பூர தீபம், ஆபரணம் முதலியவைகளாம்.
காற்று
வாயு எனும் காற்று சம்பந்தமான உபசாரங்கள்: தூபம், சாமரை அல்லது சாமரம், விசிறி, கொடை, பதாகை முதலானவைகளாம்.
வானம்
ஆகாச எனும் வானம் சம்பந்தமான உபசாரங்கள்: மணி, வாத்தியம், கைமணி ஓசை, தோத்திரம் எனும் ‘மந்திரஒலி உச்சரிப்பு’, கீதம் முதலானவைகளாம்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads