படைப்பாக்கப் பொதுமங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்சு - Creative Commons) என்பது ஆக்கங்களை சட்டப்படி மற்றவரோடு பகிர்ந்துகொள்ளலை ஊக்குவிப்பதையும் விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இயங்கும் இலாபநோக்கற்ற அறக்கட்டளை ஆகும். இது 2001 இல் லோறன்ஸ் லெஸிக் என்பவரால் தொடங்கப்பட்டது. இது ஆக்கர்களுக்கும் பயனர்களுக்கு இடையேயான ஒரு பாலமாக அமைகிறது. படைப்பாக்கப் பொதுவெளி உரிமங்கள் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்தாமல், அளிப்புரிமையை ஊக்குவிக்கின்றன. எந்த உரிமையை அளிப்பது என்பது அதாவது முழுவதையும் காப்புரிமைக்கு கட்டுப்படுத்தலில் இருந்து முழுமையாகப் பொதுவில் விடுதல் என்ற தெரிவு ஆக்கர்களிடமே விடப்படுகிறது. கட்டற்ற படைப்பு உரிமங்களுக்கும், முழுமையான காப்புரிமை உரிமங்களுக்கும் இடைப்பட்ட ஒரு மிதவாத தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

Remove ads
வரலாறு
தற்போது எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்து உரிமைகளும் காப்புடைமையானவை என்ற சட்டம் தீவரவாத நிலைப்பாட்டை உடையதாகும். பெரும்பாலான நேரங்களில் பயனர்களின் சமூகத்தின் நியாமான பயன்பாட்டிற்கு இது தடையாக அமைந்து விடுகிறது. பல சந்தர்ப்பங்களில் ஆக்கர்களே அவ்வாறு தமது படைப்புக்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. ஆகவே இந்த தடையை நடைமுறையில் தளர்த்துதவற்காக உருவாக்கப்பட்டதுதான் படைப்புப் பொதுமங்கள் உரிமங்கள் என்று லோறன்சு லெசிக் கூறுகிறார்.[1]
Remove ads
உரிமங்கள்
இவ்வமையமானது இதற்கென பல்வேறு வகையான காப்புரிமை உரிம ஒப்பந்தங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இவ்வுரிம ஒப்பந்தங்கள் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் என அறியப்படுகின்றன. இந்த உரிமைகள் ஆக்கர்களை அவர்கள் தெரிந்தெடுக்கும் அவர்களுக்கு ஏற்ற உரிமங்களோடு தமது படைப்புக்களை வெளியிட ஏதுவாக்கின்றன. பல்வேறு தேவைகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் வெவ்வேறு வகையான ஆறு உரிம ஒப்பந்தங்ள் உருவாக்கப்பட்டுள்ளன.
Remove ads
விமர்சனங்கள்
படைப்பாக்கப் பொதுமங்கள் அமைப்பும் அதன் உரிம ஒப்பந்தங்களும் பல்வேறு தரப்பினரால் எதிர்நிலையாக விமர்சிக்கப்படுகின்றன. கட்டற்ற மென்பொருள் அமையத்தின் உருவாக்குனரும், கட்டற்ற புலமைச்சொத்து தொடர்பான தத்துவம், இயங்குகை ஆகிவற்றுக்காக நன்று அறியப்பட்டவருமான ரிச்சர்ட் ஸ்டால்மன், ஒரு அமைப்பு என்ற ரீதியில் தான் படைப்பாக்கப் பொதுமங்களுக்கு இற்கு இனியும் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற பொருள்பட கருத்து வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads