பட்டி (இமாச்சலப் பிரதேசம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பட்டி (Baddi) என்பது இமாச்சலப் பிரதேசத்தில், சிவாலிக் குன்றுகளுக்கிடையில், சோலன் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழில் நகரம் ஆகும். இந்த நகரத்தில் ஏராளமான மருந்து குழுமங்கள் உள்ளன.[1]

பட்டி இமாச்சலப் பிரதேசம் மற்றும் அரியானா மாநில எல்லைகளில் அமைந்துள்ளது.  சண்டிகரிலிருந்து 35 கிலோ மீட்டரும் கல்கா என்ற ஊரிலிருந்து 18 கிலோமீட்டரும் பட்டி உள்ளது.   சிப்லா, அஜந்தா பார்மா, காடியா பார்மா,  ரான்பாக்சி, ஆபட் பார்மசூட்டிக்கல்ஸ் போன்ற பல மருந்து குழுமங்களின் தொழிற்சாலைகளும் அவற்றின் நிருவாக அலுவலகங்களும் உள்ளன. மருந்து குழுமங்கள் மட்டுமல்லாமல் நெசவுத் தொழிற்சாலைகளும் உள்ளன.  தைவான், கொரியா, சீனா, லத்தின் அமெரிக்கா நாடுகள், பிலிப்பீன்சு போன்ற நாடுகளுக்குப் பெரிய அளவில் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. [2]

சிவாலிக் குன்றுகளில் 40 ஏக்கரா பரப்பளவில் பட்டி பல்கலைக்கழகம் உள்ளது. [3]

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads