பருத்திப்பட்டு ஏரி

இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஏரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

பருத்திப்பட்டு ஏரி (Paruthipattu Lake) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் உள்ள ஓர் ஏரியாகும். இது சென்னையின் ஆவடி வட்டாரத்தின் பருத்திப்பட்டு ஊரில் அமைந்துள்ளது.சேத்துப்பட்டு ஏரிக்குப் பிறகு நகரத்தின் இரண்டாவது சுற்றுச்சூழல் பூங்கா இதுவாகும்.[2] 87.06 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள பருத்திப்பட்டு ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[3] [4][5]

விரைவான உண்மைகள் பருத்திப்பட்டு ஏரி Paruthipattu lake, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

பருத்திப்பட்டு ஏரி நீண்ட காலமாக மேற்கு புறநகர் பகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட நீர்நிலைகளில் ஒன்றாக இருந்தது. 2018 ஆம் ஆண்டில், நீர்வளத் துறையானது 280 மில்லியன் செலவில் ஏரியை மீட்டு, சுற்றுச்சூழல் சுற்றுலாத் தளமாக ஏரியை மேம்படுத்தியது. 2019 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 அன்று ஏரி சூழல்-பூங்கா பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. [6] புனரமைப்புக்காக இத்திட்டம் சுமார் 500 நபர்களை இடமாற்றம் செய்தது. [7]

Remove ads

ஏரி

கூவம் ஆற்றின் மாசுபடாத பகுதியிலிருந்து வரும் உபரி நீரால் இந்த ஏரிக்கு நீர் கிடைக்கிறது. [1] பருத்திப்பட்டு ஏரியானது ஆதிபராசக்தி நகர் மற்றும் கோவர்த்தனகிரி போன்ற அண்டை பகுதிகளில் நிலத்தடி நீரை மேம்படுத்த ஆதாரமாக உள்ளது. [8] ஏரியின் சராசரி ஆழம் 12 அடியாகும். [7]

ஏரியைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் 3 கிமீ நீள நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், புத்துணர்வூட்டும் தொகுதி, பொது மக்கள் கூடும் மைய பிளாசா, மூன்று தரையிறங்கும் பகுதிகளைக் கொண்ட படகு தளம்,[9] பறவைகள் கூடு கட்ட இரண்டு தீவுகள், திறந்தவெளி அரங்கம் ஆகியவை உள்ளன. இவை தவிர நிர்வாக அலுவலக கட்டிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம். [1] [8] போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. ஏரியைச் சுற்றி சுமார் 35 வகையான செடிகள் நடப்பட்டுள்ளன.

ஆவடி நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க 350 மில்லியன் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த வசதி 10 மில்லியன் லிட்டர் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை ஏரிக்கு அனுப்பும். தவிர தொழிற்சாலை பயன்பாட்டிற்கு இதற்குச் சமமான தண்ணீரை விற்கவும் செய்கிறது. [7]

Remove ads

இதையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads