பல்படிகத் திண்மம்

From Wikipedia, the free encyclopedia

பல்படிகத் திண்மம்
Remove ads

ஒரு திண்மத்தின் சிறுசிறு பகுதிகள் மட்டும் குறும்படிகங்களாய் இருந்து, இக்குறுபடிகங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று வெவ்வேறான கோணங்களில் இணைந்திருந்தால் அவ்வகை திண்மத்தை பல்படிகத் திண்மம் (polycrystalline, multicrystalline materials, அல்லது polycrystals) என்பர். இதிலும் குறும்படிகத்தின் பரும அளவைப்பொருத்து, மில்லி மீட்டர் அளவுப் பல்குறும்படிகம், மைக்ரோ மீட்டர் அளவுப் பல்குறும்படிகம், நானோ மீட்டர் அளவுப் பல்குறும்படிகம் என்று குறிக்கப்படும். குறும்படிகத்தின் பரும அளவைப்பொருத்து அத்திண்மத்தின் இயல்பியல் பண்புகள் பெருமளவு மாறுபடும். எடுத்துக்காட்டாக, மின் கடத்துமை பல்லாயிரம் மடங்கு வேறுபடும். அதே போல திண்மத்தின் காந்தப் பண்புகள், ஒளிப்பண்புகள், வேதியியல் பண்புகள் எல்லாம் மிக மிக மாறுபடும்.[1][2][3]

Thumb
பல்படிக சிலிக்கானால் செய்யப்பட்ட ஒளிமின்கலம் காட்டப்பட்டுள்ளது.
Thumb
பல்படிகத் திண்மங்களில் அணுக்கள் அமைந்திருக்கும் நிலை காட்டப்பட்டுள்ளது. ஒப்பீட்டுக்காக சீருறாத் திண்மைங்களிலும், ஒரே சீரடுக்குப் படிகங்களிலும் அணுக்கள் அமைந்திருக்கும் ஒழுங்கும் காட்டப்பட்டுள்ளன.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads