பாக்கசுபி3
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாக்கசுபி3 (FOXP3, போர்க்கெடு பாக்கசு P3) புரதம் சுகர்பின் (scurfin) என்றும் அழைக்கப்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்விளைவுகளில் ஈடுபடும் ஒரு புரதமாகும்.[1] பாக்கசு புரதக் குடும்பத்தைச் சேர்ந்த பாக்கசுபி3, தி உயிரணுக்களின் வளர்ச்சியிலும் செயலியக்கத்திலும் கட்டுப்படுத்துப்பாதையில் முதன்மையான கட்டுப்படுத்தியாகச் செயல்படுவதாகத் தோன்றுகிறது.[2][3][4] கட்டுப்படுத்து தி உயிரணுக்கள் பொதுவாக நோயெதிர்ப்பு ஆற்றலைக் தணிக்கின்றன. புற்றுநோயில், கட்டுப்படுத்து தி உயிரணு செயல்பாட்டை அதிகமாகச் செய்வதானது நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதைத் தடுக்கலாம். தன்னுடல் தாக்க நோய்களில், கட்டுப்படுத்து தி உயிரணுச் செயல்பாட்டின் குறைபாடு மற்ற தன்னுடல் எதிர்ப்பொருள் செல்கள் உடலின் சொந்த திசுக்களை தாக்க அனுமதிக்கும்.[5][6]

துல்லியமான கட்டுப்பாட்டு பொறிமுறை இன்னும் நிறுவப்படவில்லை என்றாலும், பாக்கசுப் புரதங்கள் படியெடுப்புக் கட்டுப்படுத்திகளின் போர்க்கெடு/ கிளைத்தசுரி (forkhead/winged-helix) குடும்பத்தைச் சேர்ந்தவை, மேலும் படியெடுப்பின் போது ஒத்த டி. என். ஏ பிணைப்பு தொடர்புகள் மூலம் கட்டுப்பாட்டை செலுத்துவதாகக் கருதப்படுகிறது. கட்டுப்படுத்து தி உயிரணு மாதிரி அமைப்புகளில், பாக்கசுபி3 (FOXP3) படியெடுப்புக்காரணி கட்டுப்படுத்து தி உயிரணு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள மரபணுக்களுக்கான ஊக்குவிப்பான்களைக் கொண்டுள்ளன, மேலும் டி செல் ஏற்பிகளின் தூண்டுதலைத் தொடர்ந்து முக்கிய மரபணுக்களின் படிவடிப்புகளைத் தடுக்கலாம்[7]
Remove ads
அமைப்பு
மனித பாக்கசுபி3 மரபணுக்களில் 11 நிரல் எக்குசான்கள் (Exon) உள்ளன. எக்குசான்-இண்டரான் எல்லைகள் எலி மற்றும் மனித மரபணுக்களின் குறியீட்டு பகுதிகளில் ஒரே மாதிரியானவை. மரபணு வரிசை பகுப்பாய்வு மூலம், பாக்கசுபி3 (FOXP3) மரபணு X குரோமோசோமின் p-கைக்கு படியொப்பாகுகிறது (map) (குறிப்பாக, Xp11.23.[1][8]
நோயுறு உடலியங்கியல்
மனித நோய்களில், கட்டுப்பாட்டு தி உயிரணுக்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள்-குறிப்பாக பாக்கசுபி 3 ஐ வெளிப்படுத்தும் மாற்றங்கள்-பல நோய் நிலைகளில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கட்டிகள் உள்ள நோயாளிகள் உள்ளூர் ஒப்பீட்டளவில் அதிகப்படியான Foxp3 நேர்ம தி உயிரணுக்களைக்T கொண்டுள்ளனர், இது புற்றுநோய் செல்கள் உருவாவதை அடக்கும் உடலின் திறனைத் தடுக்கிறது.[9] மாறாக, சிஸ்டமிக் லூபஸ் எரிதெமாடோசஸ் (எஸ். எல். இ.) போன்ற தன்னுடல் தாக்க நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாக்கசுபி3 னேர்ம உயிரணுக்களில் செல்களின் தொடர்புடைய செயலிழப்பைக் கொண்டுள்ளனர்.[10]. பாக்கசுபி3 மரபணு ஐபிஇஎக்ஸ் நோய்க்குறி (இம்யூனோடைஸ்ரிகுலேஷன், பாலிஎண்டோகிரினோபதி, மற்றும் என்டரோபதி, எக்ஸ்-லிங்க்ட்) ஆகியவற்றில் பிறழ்வடைகிறது.[11][12] IPEX உள்ள பல நோயாளிகள் FOXP3 இன் டிஎன்ஏ-பிணைப்பு போர்க்கெடு களத்தில் பிறழ்வுகளைக் கொண்டுள்ளனர்.[13]
Remove ads
புற்றுநோயில் பங்கு
கட்டுப்பாட்டு தி உயிரணு வேறுபடுத்துமையில் பாக்கசுபி 3 இன் பங்கிற்கு மேலுமாக, புற்றுநோய் வளர்ச்சியில் பாக்கசுபி 3 முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை பல சான்றுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தானே தன்னுடல் தாக்கி அமைப்பு
பாக்கசுபி3 ஒழுங்குறுத்துப பாதையின் பிறழ்வுகள் அல்லது இடையூறுகள், குறிப்பிட்ட உறுப்பைச்சார்ந்த தானே தன்னுடல் தாக்கி நோய்களுக்குக் காரணமாகலாம். தானே த்ன்னுடல் தாக்கி தைராய்டழற்சி, வகை-1 நீரிழிவு நோய் போன்ற உறுப்பு சார்ந்த தானே தன்னுடல் தாக்கி நோய்களுக்கு வழிவகுக்கும்
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
