பார்சி-முஸ்லீம் கலவரங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பார்சி-முஸ்லீம் கலவரங்கள் (Parsi–Muslim riots) பம்பாய் மாகாணத்தின் தலைநகரான மும்பை நகரத்தில் முதலில் 1851ஆம் ஆண்டில் முதலில் தொடங்கியது.[1] பின்னர் இச்சமயக் கலவரங்கள் மும்பை மற்றும் குஜராத் பகுதிகளில் 1857, 1874 மற்றும் 1874ஆம் ஆண்டுகளில் தொடர்ந்தது. அக்டோபர் 1851ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் கலவரத்திற்கு காரணம் பார்சிகள் தங்கள் சரதுசம் சமயத்தின் செய்தித்தாளில் முகமது நபியின் படத்தை அச்சிட்டு வெளியிட்டது ஆகும்.

விரைவான உண்மைகள் பார்சி-முஸ்லீம் கலவரங்கள் 1851, 1857, 1874 மற்றும் 1885, தேதி ...

இரண்டாவது பார்சி-முஸ்லீம் கலவரம் மே 1857இல் பெஜோன்ஜி ஷெரியாஜி பருச்சா என்ற பார்சி மசூதியை அவமரியாதை செய்ததாக முஸ்லீம்களால் குற்றம் சாட்டப்பட்டார்.

மூன்றாவது பார்சி முஸ்லீம் கலவரம் 13 பிப்ரவரி 1874 அன்று Famous Prophets and Communities என்ற நூலில் முகமது நபி குறித்த கட்டுரை வெளியானதை அடுத்து ஏற்பட்டது.[2]

நான்காவது பார்சி-முஸ்லீம் கலவரம் 26 நவம்பர் 1885 அன்று மும்பை நகராட்சி அனுமதி பெறாத இடத்தில் முஸ்லீம்கள் தர்கா கட்டுவதை பார்சிகள் தடுத்ததால் ஏற்பட்டது.[3]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads