பால்குளங்கரை தேவி கோவில்
கேரளத்தில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பால்குளங்கரை தேவி கோவில் (Palkulangara Devi Temple, மலையாளம்: പാല്കുളങ്ങര ദേവി ക്ഷേത്രം) இந்தியாவின், கேரள மாநிலத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும்.[1] இது திருவனந்தபுரம் சந்திப்பிலிருந்து 2 கி.மீ தொலைவிலும், மேற்கு கோட்டை சந்திப்பிலிருந்து 700 மீ தொலைவிலும், சாக்கை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து 1.5 கி.மீ தூரத்திலும் உள்ளது. இது திருவனந்தபுரம் நகரில் உள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலுக்கு மேற்கே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்போது இந்த கோயில் சிறீபால்குளங்கரை தேவி கோயில் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கேரளாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும்.
Remove ads
அமைவிடம்
ஆள்கூறுகள் - 8°29'15"N 76°56'1"E
வரலாறு
இந்த கோவிலில் உள்ள முக்கிய தெய்வம் அர்ஜுனனால் நிறுவப்பட்டது என்று புராணம் கூறுகிறது. தெய்வத்தை நிறுவிய பின், அர்ஜுனன் ஒரு அம்பை தரையில் செலுத்தினான், அது ஒரு பால் குளத்திற்கு வழிவகுத்தது. குளத்தில் இருந்து பால் அபிசேகத்திற்காக பயன்படுத்தப்பட்டது. பால்குளங்கரை என்றால் பால் குளத்தின் கரைகள் என்று பொருள். இந்த குளம் கோவிலின் பின்புறம் உள்ளது.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads