பி. எஸ். ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

9.292532°N 77.701577°E / 9.292532; 77.701577 பி. எஸ். ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரி (P. S. R. Rengasamy College of Engineering for Women) என்பது தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இதை பி. எஸ். இராமசாமி கல்வி அறக்கட்டளை நடத்திவருகிறது. இந்தக் கல்லூரியானது புது தில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Remove ads

வரலாறு

இக்கல்லூரியானது விருதுநகர் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் பொறியியல் கல்வியை மேம்படுத்துவதற்காக பி. எஸ். இராமசாமி நாயுடுவின் மகன்களால் நிறுவப்பட்டது. இந்த கல்வி நிறுவனமானது சிவகாசி - சங்கரன்கோயில் சாலையில், சேவல்பட்டி மற்றும் திருவேங்கடம் இடையே சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது   கோவில்பட்டியில் இருந்து 28 கி.மீ தொலைவிலும், 26   சிவகாசி நகரத்திலிருந்து 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது

துவக்கத்தில் இக்கல்லூரிக்கு முதல்வராக முனைவர் கே. ஆர். விசுவநாதன் (2008–2011) இருந்தார். தற்போது,

  • முதல்வர்: டாக்டர் கே. இராமசாமி
  • தலைவர்: திரு. ஆர். இராமதாஸ்
  • தாளாளர்: திரு. ஆர். சோலைசாமி
  • இயக்குநர்கள்: ஆர். சுந்தர் மற்றும் ஆர். அருண்
Remove ads

கல்லூரியின் முக்கிய அம்சங்கள்

  • ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனம்
  • அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 15 வது இடத்தைப் பிடித்தது
  • சி.எஸ்.ஐ (கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா) இன் செயல் மிக்க உறுப்பினர்
  • நாஸ்காமில் உறுப்பினர்
  • ஐஇடிஇ- இல் உறுப்பினர்
  • ஐ.சி.டி-ஆக்ட- செயல்மிக்க உறுப்பினர்
  • ஐஎஸ்டி (தொழில்நுட்ப கல்விக்கான இந்திய சங்கம்) உறுப்பினர்

வளாக வசதிகள்

சங்கங்கள்

குழு விவாதங்களில் மாணவர்கள் ஈடுபாடுவதை ஊக்குவிப்பதும், மாநில மற்றும் தேசிய நிலைகளில் உள்ள கல்லூரிகளில் நடத்தப்படும் மாநாடுகளில் ஆய்வேடுகளை வழங்க உறுப்பினர்களை ஊக்குவிப்பதும் இந்த சங்கங்களின் நோக்கம். தற்போதுள்ள சங்கங்கள் பின்வருமாறு:

  • அடிப்படை அறிவியல் சங்கம்
  • சி.எஸ்.ஐ மாணவர் கிளை
  • ஆங்கில இலக்கிய சங்கம்
  • எப்ஓஎஸ்எஸ் சங்கம்
  • ஐஎஸ்டிஇ மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பிரவு
  • ஐஇடிஇ மாணவர் பிரிவு

விடுதிகள்

இந்தக் கல்லூரி விடுதியில் சுமார் 500 மாணவர்கள் தங்கலாம்.

படிப்புகள்

  • மின்னணு தொடர்பு மற்றும் பொறியியல்
  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • பி.டெக் தகவல் தொழில்நுட்பம்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads