பிரதியுசா பொறியியல் கல்லூரி
சென்னை பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரதியுஷா பொறியியல் பொறியியல் கல்லூரி (Prathyusha Engineering College) என்பது தமிழ்நாட்டின், பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது பூந்தமல்லியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் பூந்தமல்லிக்கும் திருவள்ளூருக்கும் இடையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவரான, திரு இராஜா ராவால் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி என்ஏஏசி-ஆல் ஏ தரச்சான்று அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, ஏஐசிடிஇ-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் யுஜிசியால் பிரிவு 2 எஃப் / 12 பி இன் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளது. [1]
Remove ads
வரலாறு
பிரதியுஷா பொறியியல் கல்லூரி 2001 ஆம் ஆண்டில் பிரத்யுஷா கல்வி அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளையின் தலைவரும் பிரதியுஷா குழும நிறுவனங்களின் தலைவரான பி. ராஜராவால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது பி.இ. பாடப்பிரிவில் மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல், கனிணி அறிவியல் மற்றும் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், குடிசார் பொறியியல், இயந்திரப் பொறியியல், பி.டெக். பாடத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிர் தொழில்நுட்டபம் ஆகிய இளநிலைப் படிப்புகளும் - முதுநிலை படிப்புகளில் கணினி செயலி, ஆற்றல் மின்னணு மற்றும் செயலி, ஸ்டர்க்சல் இஞ்சினியரிங், கனிணி அறிவியல் மற்றும் பொறியியல், எம்.டெக் உயிர் தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த 497 கல்லூரிகளில், இக்கல்லூரியானது கல்வி செயல்திறனில் 5 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியானது மாணவர்களின் திறன்களை அடையாளம் கண்டு, உலகளாவிய தரத்திற்கு இணையாக அவர்களை தொழில் வளர்ச்சி நோக்கி மேம்படுத்துகிறது.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads