பிரப் நினைவாலயம்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில் From Wikipedia, the free encyclopedia

பிரப் நினைவாலயம்map
Remove ads

பிரப் நினைவாலயம்[1][2] அல்லது சி. எஸ். ஐ. பிரப் நினைவாலயம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு மாநகரில் அமைந்துள்ள ஒரு தென்னிந்தியத் திருச்சபை ஆகும்.[3] ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் பகுதியின் ஒரு கிறித்தவ மத போதகரான Rev. அந்தோணி வாட்சன் பிரப் என்பவரால் கி. பி. 1930ஆம் ஆண்டு இத்திருத்தலம் உருவாக்கப்பட்டது.[4] பிரப், ஈரோடு மாவட்டத்தில் 1897 முதல் 1933 வரை கிறித்தவ மத போதகராக சேவைகள் செய்து வந்தார்.

விரைவான உண்மைகள் பிரப் நினைவாலயம், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 191.95 மீட்டர்கள் (629.8 அடி) உயரத்தில், (11.338701°N 77.726119°E / 11.338701; 77.726119) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, ஈரோடு மாநகரின் மீனாட்சி சுந்தரனார் சாலை (இதற்கு முன்னர் பிரப் சாலை (முந்தைய ஈரோடு நகராட்சி உறுப்பினராக இருந்த பிரப் என்பவரின் நினைவாக சாலையின் பெயர்))[5][6] சந்திப்பில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் இத்தேவாலயம் அமையப் பெற்றுள்ளது.

விபரங்கள்

இந்த தேவாலயமானது, உரோமானிய மற்றும் கோத்திக் கலைகளின் கலவை கொண்ட முன்பக்கம், சிற்ப நுணுக்கங்கள், நேர்த்தியான தோரண வாயில்கள் ஆகியவற்றுடன் சிறப்புற விளங்குகிறது.[7]

ஒவ்வோர் ஆண்டும், ஆங்கிலப் புது வருடம் பிறக்கும் இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் இத்திருத்தலத்தின் முன் கூடி, புத்தாண்டை வரவேற்கின்றனர்.[8]

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads