பிரித்தானிய அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

பிரித்தானிய அருங்காட்சியகம்
Remove ads

பிரித்தானிய அருங்காட்சியகம் என்பது இலண்டனில் அமைந்துள்ள, மனித வரலாறு, பண்பாடு என்பன தொடர்பான அருங்காட்சியகம் ஆகும். 7 மில்லியன்களுக்கு மேற்பட்ட காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் உலகின் மிகவும் பெரியதும், முழுமையானதும் ஆகும். உலகின் எல்லாக் கண்டங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட இங்குள்ள காட்சிப் பொருட்கள் மனிதப் பண்பாட்டின் கதையை அதன் தொடக்க காலத்திலிருந்து தற்காலம் வரை விளக்கி ஆவணப்படுத்துகின்றன.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
Thumb
Thumb
பிரித்தானிய அருங்காட்சியகக் கூடத்தின் கூரை

இந்த அருங்காட்சியகம், மருத்துவரும் அறிவியலாளருமான சர் ஆன்சு சுலோன் (Sir Hans Sloane) என்பவரின் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு 1700 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புளூம்சுபரியில், இன்றைய அருங்காட்சியகம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த மான்டேகு இல்லத்தில் இருந்த இந்த அருங்காட்சியகம் 1759 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதற்குப் பிற்பட்ட இரண்டரை நூற்றாண்டுக் காலத்தில் இது பல கிளை நிறுவனங்களைக் கொண்டதாக விரிவாக்கம் பெற்றது. இவற்றுள் தென் கென்சிங்டனில் 1887 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரித்தானிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் முதலாவது ஆகும். 1997 ஆம் ஆண்டில் பிரித்தானிய நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்படும் வரை, அருங்காட்சியகமும், தேசிய நூலகமும் ஒரே கட்டடத்திலேயே இயங்கிவந்தன.

Remove ads

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads