புதுச்சேரி துறைமுகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புதுச்சேரியில் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி மாவட்டத்தில் ஒரு வர்த்தக துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் உள்ளது . காரைக்கால் மாவட்டத்தில் தனியார் பங்களிப்புடன் கூடிய ஒரு வர்த்தக துறைமுகம் உள்ளது
Remove ads
புதுச்சேரி துறைமுக வரலாறு
புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைத்து இந்த இணைப்புக்கு முன்பிலிருந்தே புதுச்சேரி ஒரு துறைமுக நகரமாக விளங்கியது .வணிகம் மற்றும் வர்த்தகம் செழுமை கொண்ட துறைமுக நகரமாக இருந்தது.புதுச்சேரியில் இருந்த அரிக்கமேடு துறைமுகத்தில் இருந்து ரோம பேரரசு வர்த்தகம் நடைபெற்றதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன.அந்த துறைமுகம் வாயிலாக கிரேக்க இராச்சியம் மற்றும் ரோம பேரரசுடன் கிமு 100 முதல் கிபி 100 வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது .ஜவுளிகள் ,முத்து மற்றும் பட்டு முக்கிய ஏற்றுமதியாக இருந்தது .மேலும் அரிக்கமேட்டில் அகழ்வாராச்சியில் கிடைத்த சோழர் கால நாணயங்கள் மூலம் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் சோழர்கள் சீனா நாட்டுடன் கொண்ட வர்த்தகம் புலப்படுகிறது மேலும் பல அரசமரபு ,பேரரசுகளை கடந்து கிபி ௧௬௧௪ஆம் ஆண்டில் போர்த்துகீசிய படையெடுப்பு .1618 ஆம் ஆண்டு நெதர்லாந்து படையெடுப்பு கண்டது இத்துறைமுகம் .கிபி 1673 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இத்துறைமுகம் செழுமையாக விளங்கியது மட்டும் இன்றி சர்வதேச வணிகம் மற்றும் வர்த்தகம் மையம் ஆகவும் செயல்பட்டது[1]
Remove ads
புதுச்சேரி மீன்பிடி துறைமுகம்
புதுச்சேரியில் புதுச்சேரி தாலுகாவில் கீழ் உள்ள தேங்காய்திட்டு பகுதியில் மின் பிடி துறைமுகம் அமைந்து உள்ளது .18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் தேங்காய்த்திட்டு துறைமுகம் வழியாக கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். [2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
