புலியூர், நாகப்பட்டினம்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புலியூர் (Puliyur, Nagapattinam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது மாவட்டத் தலைமையகமான நாகப்பட்டினத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் சிக்கல் கிராமத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. வியாக்ரபுரீசுவரர் என்றழைக்கப்படும் சிவபெருமான் கோவில் இவ்வூரில் அமைந்துள்ளது.
Remove ads
கோயில்கள்
இந்த கிராமத்தில் 1. சிவகாமசுந்தரி சமேத வியாக்ரபுரேஸ்வரர் கோவில், 2. லட்சுமி நாராயண பெருமாள் கோவில், 3. வரசித்தி விநாயகர் கோவில், 4. அய்யனார் கோவில், 5. செல்வமுத்து மாரியம்மன் கோவில் என ஏராளமான கோவில்கள் உள்ளன. பழங்காலத்தில் இக்கிராமம் வியாக்ரபுரி என்று அழைக்கப்பட்டது. இங்கு உள்ள கோயில்களில் பல கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன.[1]
இந்த கிராமம் பல இந்து மத நடவடிக்கைகளுக்கு பிரபலமானது மற்றும் சென்னையில் அமைந்துள்ள வியாக்ரபுரி சேவா அறக்கட்டளை தீவிரமாக பங்கேற்று திருவிழாக்களை ஏற்பாடு செய்து வருகிறது.
Remove ads
கிராமங்கள்
தேமங்கலம், புலியூர், அடிப்பள்ளம், சீரங்குடி, சிக்கவலம் ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து புலியூர் கிராமம் ஆகும். தேமங்கலம் ஊராட்சி என அழைக்கப்படுகிறது. புலியூரில் மொத்தம் சுமார் 3000 மக்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது.[2]
போக்குவரத்து
புலியூரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் இப்பகுதிக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். மேலும் சென்னை சர்வதேச விமான நிலையம் சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமம் திருவாரூர் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையிலிருந்து வடக்கே சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து நிறுத்தம் - ராமர் மடம் என்ற இடமாகும். இவ்வூருக்கு ரயில் நிலையம் நாகப்பட்டினம் சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இக்கிராமத்தின் அஞ்சல் குறையீட்டு எண்.611 108 ஆகும்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads