பெ. சு. திருவேங்கடம்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரியகுளம்பாடி சுப்பராயன் திருவேங்கடம் (17, ஆகத்து 17, 1935 - 12, செம்டம்பர், 2022) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நான்கு தனித்தனி சந்தர்ப்பங்களில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழ்நாட்டின் திராவிட அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]
Remove ads
அரசியல்வாழ்வு
இவர் 1962இல் ஊராட்சித் தலைவராகவும், 1970 இல் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1977,[2] 1980, 1989,[3] 1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, கலசப்பாக்கம் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6][7]
குடும்பம்
பெ. சு. திருவேங்கடத்துக்கு சகுந்தலா என்ற மனைவியும், நான்கு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது மகன் பெ. சு. தி. சரவணன் கலசப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads