பெங்களூரு நகரப் பல்கலைக்கழகம்

பெங்களுருவின் மாநிலப் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெங்களூரு நகரப் பல்கலைகழகம் (Bengaluru City University) இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம் [1] ஆகும். முன்னதாக பெங்களூரு மத்தியப் பல்கலைக்கழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 2020-ஆம் ஆண்டில் மறுபெயரிடப்பட்டது.

விரைவான உண்மைகள் முந்தைய பெயர், குறிக்கோளுரை ...
Remove ads

வரலாறு

பெங்களூரு பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.[2] பல்கலைக்கழக விசுவேசுவரய்யா பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவரும் கல்லூரியின் முதல்வருமான முனைவர் கே.ஆர். வேணுகோபால் பெங்களூரு பல்கலைக்கழகத்தை மூன்றாகப் பிரிப்பதற்காக கர்நாடக அரசின் சிறப்பு அதிகாரியாக [3][4] இருந்தார். பெங்களூரு பல்கலைக்கழகத்தை பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு நகர பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகம் என மறுசீரமைப்பதற்கான அறிக்கையை 26 மார்ச் 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26 ஆம் தேதியன்று இவர் சமர்ப்பித்தார். 2020 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்டது [5] இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் எசு. இயபேட்டு ஆவார். நரசிம்ம மூர்த்தி நவம்பர் 2020 இல் இவருக்குப் பதிலாக இடைக்கால துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் பின்னர் ஏப்ரல் 2021 இல் லிங்கராசா காந்தி நியமிக்கப்பட்டார்.

Remove ads

இணைப்பு

2019-20 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகத்தில் 204 இணைப்புக் கல்லூரிகள், 24 கல்விக் கல்லூரிகள் மற்றும் 9 தன்னாட்சிக் கல்லூரிகள் இருந்தன.[6] குறிப்பிடத்தக்க இணைக்கப்பட்ட கல்லூரிகள் பின்வருமாறு:

  • நுண்கலைகள் கல்லூரி, பெங்களூர்
  • அரசு அறிவியல் கல்லூரி, பெங்களூரு
  • சோதி நிவாசு கல்லூரி
  • மகாராணி லட்சுமி அம்மானி மகளிர் கல்லூரி
  • மவுண்ட் கார்மல் கல்லூரி, பெங்களூர்
  • விசயா கல்லூரி, பெங்களூரு
  • செயின்ட் பிரான்சிசு கல்லூரி, கோரமங்களா, பெங்களூர்
Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads