பெண்மையாக்கம்

ஆணிடம் பெண்ணுக்கு உரித்தான பெண்மைப் பண்பியல்புகள் துணைப் பண்புகளாக வளர்ந்திருத்தலைக் குறிக From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெண்மையாக்கம் (Feminization) என்பது உயிரியல் மற்றும் மருத்துவத்தில் ஓர் ஆணிடம் பெண்ணுக்கு உரித்தான பெண்மைப் பண்பியல்புகள் துணைப் பண்புகளாக வளர்ந்திருத்தலைக் குறிக்கிறது. ஒரு சாதாரண வளர்ச்சி செயல்முறையை பிரதிநிதித்துவப்படுத்தி பாலின வேறுபாட்டிற்கும் இது பங்களிக்கிறது. பெண்மயமாக்கல் சுற்றுச்சூழல் காரணிகளால் தூண்டப்படலாம். இந்த பெண்மையாக்க நிகழ்வு பல விலங்கு இனங்களிலும் காணப்படுகிறது.[1] [2] திருநங்கை இயக்குநீர் சிகிச்சையைப் பொறுத்தவரை இப்பண்பு செயற்கையாக வேண்டுமென்றே தூண்டப்படுகிறது.

Remove ads

நோயியல் பெண்மையாக்கம்

விலங்குகளில், ஓர் ஆணிடத்தில் அல்லது பொருத்தமற்ற வளர்ச்சி வயதில் பெண்மையாக்கம் ஏற்படும் போது அது பெரும்பாலும் மரபணு அல்லது நாளமில்லா சுரப்பித் தொகுதி அமைப்பில் பெறப்பட்ட கோளாறு காரணமாக நிகழ்கிறது. மனிதர்களில், அசாதாரண பெண்மையாக்க நிகழ்வின் பொதுவான வெளிப்பாடுகளில் ஒன்று ஆண்களுக்கு  இயல்புக்கு மாறாக மார்பகங்கள் பெரிதாக வளர்ச்சி அடைவதாகும். ஆண் மார்பக வீக்கம் எனப்படும் இது ஈசுட்ரோசன்கள் போன்ற பெண்மையாக்கும் இயக்குநீர்களின் உயர் சுரப்பின் விளைவாக ஏற்படும் மார்பகங்களின் பொருத்தமற்ற வளர்ச்சியாகும். ஆண்மைப் பண்பாக்க இயக்குநீரான ஆண்ட்ரோசன்கள் குறைபாடு அல்லது இச்சுரப்பில் உள்ள அடைப்பும் பெண்மையாக்கத்திற்கு பங்களிக்கும். சில சமயங்களில், ஆண்மைப்பண்பாக்க ஆண்ட்ரோசன்கள் அதிக அளவு சுரக்கப்பட்டாலும்  ஆண்ட்ரோசன்கள் புற திசுக்களில் உள்ள அரோமடேசு நொதியினால் ஈசுட்ரோசன்களாக மாற்றப்படுகின்றன. இதன் விளைவாக அதிகரித்த உடல் முடி, ஆழமான குரல், அதிகரித்த தசை அளவு போன்ற பண்புகள் மற்றும் பெண்மையாக்கும் விளைவுகள் போன்ற இரண்டு பண்புகளும் உருவாக்கலாம்.

பூச்சி இனங்களில், இப்பெண்மையாக்கம் பரம்பரை மூலம் பெறப்படும் அகக்கூட்டுயிரி இனப்பெருக்க-கையாளுதல் மூலம் ஏற்படலாம். இது அகக்கூட்டுயிரிகளின் பரம்பரையை ஊக்குவிக்கிறது. ஏனெனில் அகக்கூட்டுயிரிகளின் தாய் பூச்சிகளால்  அவற்றின் முட்டைகளுக்கு இப்பண்புகள் அனுப்பப்படுகின்றன. [3] எனவே, மொத்த எண்ணிக்கையில்  அகக்கூட்டுயிரி பாதிக்கப்பட்ட பெண் பூச்சிகல் அதிகமாக இருந்தால், அடுத்த தலைமுறைக்கு இவ்வகக் கூட்டுயிரிகள் அதிகமாக அனுப்பப்படுகின்றன

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads