பெருங்குடி, திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெருங்குடி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், ஆண்டநல்லூர் வட்டத்துக்கு உட்பட்ட, உள்ள ஒரு சிற்றூராகும். மல்லியம்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊர் திருச்சிராப்பள்ளியிலிருந்து, வயலூர் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவிலும், ஆண்டநல்லூரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில், சோமரசம் பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது.
Remove ads
வரலாறு
சோழர் காலக் கல்வெட்டுகளில் இந்த ஊரானது பெருமுடி, திருப்பெருமுடி என்று அழைக்கப்பட்டுள்ளது. அது இப்போது மருவி பெருங்குடி என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் இந்த ஊரில் உள்ள சிவன் பெருமுடி பரமேசுவரனார் என்று அழைக்கப்படுகிறார்.[1] 13 ஆம் நூற்றாண்டில் போசள மன்னன் வீர இராமநாதன் ஆட்சிக் காலத்தில் பெருங்குடியானது ஜகதேகவீரச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அவன் காலக் கல்வெட்டுகளால் அறியப்படுகிறது.[2]
Remove ads
போக்குவரத்து
திருச்சிராப்பள்ளி கோட்டை தொடருந்து நிலையமும், திருச்சிராப்பள்ளி தொடருந்து நிலையமும் அருகிலேயே உள்ளன.
கல்வி
- காவேரி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
- காமாட்சி பலதொழிநுட்பக் கல்லூரி
பெருங்குடிக்கு அருகே உள்ள பள்ளிகள்
- பாரதி உயர்நிலைப்பள்ளி
- எஸ். எஸ். எம். எஸ்., அரும்புகழ் நகர்
- புனித கேப்ரியல்ஸ் எம். எஸ்.
- ஜி. எச். எஸ்., திருச்செந்துறை
கோயில்
இந்த ஊரில் சோழர் காலத்தில் கட்டபட்ட பழமையான அகத்தீசுவரம் கோயில் என்னும் சிவன் கோயில் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads