பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரிmap
Remove ads

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி (Lady Brabourne College) என்பது இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள பெண்கள் கல்விக்கான ஒரு நிறுவனம் ஆகும். இக்கல்லூரி இளங்கலை மற்றும் பாடங்களில் மாணவிகளைச் சேர்க்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரியாக இது செயல்படுகிறது. இக்கல்லூரி மேற்கு வங்காள மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கல்லூரியாகும்.[1]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

வரலாறு

பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி 1939ஆம் ஆண்டு சூலை மாதம் கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா ) பார்க் சர்க்கஸில் உள்ள வாடகை வீடு ஒன்றில் அன்றைய வங்காளத்தின் பிரதம மந்திரி ஏ. கே. பசுலுல் ஹக்கின் முயற்சியைத் தொடர்ந்து நிறுவப்பட்டது.[2] வங்காளத்தின் ஆளுநராக இருந்த 5வது பரோன் பிரபோர்னின் மனைவியான ஆங்கிலோ-ஐரிஷ் உயர் குடியினரான டோரின், பரோனஸ் பிரபோர்னின் நினைவாக இக்கல்லூரிக்குப் பெயரிடப்பட்டது.[2]

பிரபோர்ன் பிரபு 23 பிப்ரவரி 1939-ல் இறந்தார். அடுத்த ஆளுநரான சர் ஜான் ஹெர்பர்ட் 1939 ஆகத்து 26 அன்று இக்கல்லூரிக்கு அடிக்கல்லை நாட்டினார். இக்கல்லூரியில் 50 சதவீத இடங்கள் முசுலிம் பெண்களுக்கும், மீதமுள்ள இடங்கள் இந்துக்கள், பார்சிகள், சீக்கியர்கள், சைனர்கள் மற்றும் பிற இன சமூகத்தினருக்கும் ஒதுக்கப்பட்டது.[2]

விடுதி வசதி முசுலிம்களுக்கென பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருந்தது. முசுலீம் மாணவர்கள் குறைந்த அளவில் சேர்ந்ததால், கல்லூரியில் இந்து மாணவர் சேர்க்கை தொடங்கியது.[3] அனைத்திந்திய சிறுபான்மை சங்க கருத்தின்படி முசுலிம் மாணவர்கள் கல்லூரியில் சேருவது கடினமானது.[4] 2017-ல் இக்கல்லூரி, கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த முனைவர் பட்டம் பெறுவதற்கான படிப்பினை வழங்குவதற்கான அனுமதியினை வழங்கியது.

Remove ads

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

Thumb
1948-ல் பெருமாட்டி பிரபோர்ன் கல்லூரி மாணவர்கள்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads