பேரரசர் டைக்ரேன்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் டைக்ரேன்சு (Tigranes II, ஆர்மீனியம்: Տիգրան Բ), பரவலாக பேரரசர் டைக்ரேன்சு (ஆர்மீனியம்: Տիգրան Մեծ டைக்ரேன் மெட்சு; பண்டைக் கிரேக்கம்: Τιγράνης ὁ Μέγας டைக்ரேனசு ஹொ மெகாசு; இலத்தீன்: Tigranes Magnus)[1] (கி.மு. 140 – 55) ஆர்மீனிய இராச்சியத்தின் அரசராக இருந்தவர் ஆவார். இவரது காலத்தில் உரோமைக் குடியரசுக்கு கிழக்கில் இருந்த மிகுந்த வலிமையான நாடாக ஆர்மீனிய இராச்சியம் விளங்கியது.[2] டைக்ரேன்சு அர்த்தாக்சியட் அரசமரபைச் சேர்ந்தவராவார். இவரது ஆட்சிக்காலத்தில் ஆர்மீனிய அரசு மிகவும் விரிவடைந்திருந்தது. இதனால் பேரரசர் என அழைக்கப்பட்ட டைக்ரேன்சு பார்த்திய இராச்சியம், செலுக்சித் இராச்சியம், உரோமைக் குடியரசுடன் பல போர்களை நிகழ்த்தினார்.

Remove ads
மேற்சான்றுகள்
மேலதிகத் தகவல்களுக்கு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads