பை. ஜீ. மருத்துவக் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பை. ஜீ. மருத்துவக் கல்லூரி (B. J. Medical College, Ahmedabad) என்பது இந்தியாவின் குசராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள பொது மருத்துவக் கல்லூரி ஆகும்.
இது அகமதாபாத் பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Remove ads
வரலாறு
அகமதாபாத்து மருத்துவப் பள்ளி 1871ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் மருத்துவமனை உதவியாளர் பயிற்சியினை வழங்கி வந்தது. தொழிலதிபர் பைராம்ஜி ஜீஜீபாய் 1879ஆம் ஆண்டில் இந்நிறுவன வசதிகளை விரிவுபடுத்தி மேம்படுத்த ₹20,000 நன்கொடையாக வழங்கினார். இதன் பின்னர் இந்த மருத்துவப் பள்ளி பை. ஜீ. மருத்துவப் பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டது. 1917ஆம் ஆண்டில், இந்தப் பள்ளி பம்பாய் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர் கல்லூரியுடன் இணைக்கப்பட்டது. 1946ஆம் ஆண்டில், இந்தப் பள்ளி பம்பாய் பல்கலைக்கழகத்தின் இணைப்பைப் பெற்று உயர் தரத்தினைப் பெற்றது. இது உரிமம் பெற்ற சான்றளிக்கப்பட்ட மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் பட்டத்தை வழங்கக்கூடிய சான்றளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியாக மாறப் பல்கலைக்கழகம் அனுமதித்தது. 1951ஆம் ஆண்டில், இது குசராத் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு இளநிலைப் படிப்புகளை வழங்கத் தொடங்கியது. முதுநிலைப் படிப்புகள் 1956ஆம் ஆண்டு குசராத் பல்கலைக்கழக இணைப்பையும் பெற்றன.[1]
Remove ads
நிறுவனங்கள்
- பொது மருத்துவமனை, அகமதாபாத்
- பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை.
- எம் & ஜே கண் மருத்துவ நிறுவனம்
- குசராத் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- காசநோய் செயல்விளக்கம் மற்றும் பயிற்சி மையம்
- ஐ. நா. மேத்தா இருதயவியல் நிறுவனம்
- சிறுநீரக நோய் ஆராய்ச்சி நிறுவனம்
- அரசு முதுகெலும்பு நிறுவனம்
- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிறுவனம்
- மஞ்சுஷ்ரீ சிறுநீரக மருத்துவமனை
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
- தேஜாஸ் படேல், இருதயநோய் நிபுணர் [2]
- அர்கோவிந்த் லட்சுமிசங்கர் திரிவேதி, சிறுநீரக மருத்துவர், நோயெதிர்ப்பு நிபுணர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்[3][4]
- ஏ.கே. படேல், அரசியல்வாதி மற்றும் மருத்துவர்
- கேதன் தேசாய், சிறுநீரக மருத்துவர்
- ஜனக் தேசாய், சிறுநீரக மருத்துவர்
- ரஜினி கனபர், தான்சானிய மருத்துவர் மற்றும் பரோபகாரர்
- கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி, அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி.
ஏர் இந்தியா பறப்பு 171 (விபத்து)

சூன் 12, 2025 அன்று, ஏர் இந்தியா பறப்பு 171 (போயிங் 787), 242 பேரை ஏற்றிக் கொண்டு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பை. ஜீ. மருத்துவக் கல்லூரி கல்லூரியின் மாணவர் விடுதியில் மோதியது.[5] இந்த விபத்தில் முப்பத்து மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.[5][6] மேலும் பலர் காயமடைந்தனர். இருப்பினும் மொத்த இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் காணாமல் போனவர்கள் படுகாயமடைந்தவர்கள் மத்தியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நிச்சயமற்றதாகவே உள்ளது.[7] இந்த பேரழிவில் 241 பயணிகளும் பணியாளர்களும் உயிரிழந்தனர், ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads