பொட்டாசியம் அசிட்டேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொட்டாசியம் அசிட்டேட்டு (Potassium acetate, KCH3COO) அசிட்டிக் காடியின் பொட்டாசியம் உப்பு ஆகும்.
Remove ads
தயாரிப்பு
பொட்டாசியத்தைக் கொண்டுள்ள காரமான பொட்டாசியம் ஐதராக்சைடு அல்லது பொட்டாசியம் கார்பனேட்டை அசிட்டிக் அமிலத்துடன் வினைப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது:
- CH3COOH + KOH → CH3COOK + H2O
இந்த வகை வினையானது, அமில-கார வினை வகையானதாகவும் அறியப்படுகிறது.
ஒன்றரைஐதரேட்டானது நீர்க்கரைசலில் (CH3COOK·1½H2O) 41.3 °செல்சியசில் பாதியளவு ஐதரேட்டை உருவாக்கத் தொடங்குகிறது.
பயன்பாடுகள்
பனிநீக்கம்
பொட்டாசியம் அசிட்டேட்டானது பனி உருவாதலைத் தடுக்கும் காரணியாகவும் அதை நீக்கப் பயன்படும் காரணியாகவும் பயன்படுகிறது. கால்சியம் குளோரைடு அல்லது மக்னீசியம் குளோரைடு போன்ற பனிநீக்கியாகப் பயன்படும் குளோரைடு உப்புகளுக்கான பதிலியாகப் பயன்படுகிறது. இது மண்ணின்மீது மிகவும் தீவிரமற்றும், மென்மையாகவும் செயல்படுகிறது. இதன் காரணமாகவும், குறைவான அரிக்கும் தன்மையுடைய பொருளாகவும் இருப்பதால் விமான நிலைய ஓடுபாதைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இது மிகுந்த செலவினத்தை ஏற்படுத்தும் பொருளாகவும் இருக்கிறது.
தீ அணைப்பான்
பொட்டாசியம் அசிட்டேட்டு எரியும் எண்ணெய் வகைகளின் மீது ஒரு ஓடு போன்ற அமைக்க இயலும் தன்மையின் காரணமாகவும் மற்றும் குளிர்விக்கும் பொருளாகவும் இருக்கும் காரணத்தால் 'கே' வகை தீயணைப்பான்களில் ஒரு முக்கிய தீயணைப்புப் பொருளாகப் பயன்படுகிறது.
உணவு சேர்க்கைப் பொருள்
பொட்டாசியம் அசிட்டேட்டானது உணவுப்பொருட்களுடன் சேர்க்கப்படும் ஒரு சேர்க்கைப் பொருளாகவும், உணவு பதப்படுத்தியாகவும் மற்றும் அமிலத்தன்மையை ஒழுங்குபடுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில், இது E எண் E261 என குறிக்கப்படுகிறது;[5] இச்சேர்மமானது அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும்[6] ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட உணவு சேர்க்கைப் பொருளாகும்.[7] பொட்டாசியம் ஐதரசன் டைஅசிட்டேட்டு (CAS #4251-29-0 ) KH(OOCCH3)2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய சேர்மமும் இதே E எண் உடைய தொடர்புடைய உணவு சேர்க்கைப் பொருளாகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads