பொதுவுடைமை அறிக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொதுவுடமை அறிக்கை (The Communist Manifesto, டொய்ச்: Das Manifest der Kommunistischen Partei அல்லது பொதுவாக பொதுவுடமை அறிக்கை) எனப்படுவது 1848ம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத் திட்டமாக கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆல் இணைந்து எழுதப்பட்ட அறிக்கை ஆகும். இவ்வறிக்கை கம்யூனிஸ்ட் லீக்-ன் நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் என்பவற்றை விவரிப்பதுடன், முதலாளித்துவத்தினை வீழ்த்துவதற்கும், பொதுவுடமை சமூகத்தினை உருவாக்கும் பாட்டாளி வர்க்க புரட்சியை உண்டு பண்ணுவதற்குமான முன்னெடுப்புக்களை பரிந்துரைக்கின்றது. இதன் காரணமாக இவ்வறிக்ககை உலக அரசியல் நடவடிக்கையில் மிக்க செல்வாக்கை செலுத்துகின்றது.

'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Working men of all countries, unite!) என்பது இவ்வறிக்கையின் புகழ்பெற்ற வாசகம் ஆகும்.
Remove ads
பதிப்பு
கம்யூனிஸ்ட் அறிக்கை முதலில் 1848 இல் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் 1850 ஆம் ஆண்டு ஹெலன் மெக்ஃபார்லேன் (Helen MacFarlane) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
முகவுரைகள்
பொதுவுடமை அறிக்கை ஏழு முகவுரைகள் கொண்டது. இவற்றில் 1872, 1882 ஆகிய இரண்டு முகவுரைகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் எழுதப்பட்டவை. இதர ஐந்து முகவுரைகள் 1883, 1888, 1890, 1892, 1893 ஆகிய ஆண்டுகளில் மார்க்சின் மறைவிற்குப் பிறகு எங்கெல்சால் மட்டும் எழுதப்பட்டவை.[1]
1872
மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும் முதன்முறையாக 1872 ஆம் ஆண்டு தான் அறிக்கை வெளிவந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு முகவுரையை எழுதினார்கள். அதில் கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவு தான் மாறியிருப்பின் இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவே என்று குறிப்பிடுகின்றனர்.
Remove ads
மேற்சான்றுகள்
மூலம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads