பொற்கோயில்

சீக்கியர்களின் புனிதத் தலம் From Wikipedia, the free encyclopedia

பொற்கோயில்
Remove ads

ஹர்மந்திர் சாஹிப் (Harmandir Sahib[1], பஞ்சாபி: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது தர்பார் சாஹிப்[2] (பஞ்சாபி: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக பொற்கோயில் (Golden Temple)[3] என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்துவார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. 1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப் எனும் ஆதி கிரந்தத்தை முடித்து இந்த குருத்வாராவில் அதை நிறுவினார்.[4]

விரைவான உண்மைகள் ஹர்மந்திர் சாஹிப் Harmandir Sahib, பொதுவான தகவல்கள் ...

ஹர்மந்திர் சாஹிப் சீக்கியர்களின் புனித தலமாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப், இங்கு வைக்கப்பட்டுள்ளது . இந்த புனித கோயில், ஜாதி மத பேதமின்றி அணைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும்.

ஹர்மந்திர் சாஹிப்ற்குள் நுழைய நான்கு கதவுகள் உள்ளன. இது அனைத்து மக்கள் மற்றும் சமயங்களின் மீதான சீக்கியர்களின் வெளிப்படைத்தன்மையை பறைசாற்றும் சின்னமாக உள்ளது.[5]இன்றைய நிலையில் உள்ள குருத்வாரா, ஜஸ்ஸா சிங் அலுவாலியாவினால் மற்ற சீக்கிய படையணி உதவியுடன் 1764 இல் மீண்டும் கட்டப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், மகாராஜா ரஞ்சித் சிங், வெளி தாக்குதலில் இருந்து பஞ்சாப் பகுதியியை பாதுகாத்து குருத்வாராவின் மேல் மாடிகளை தங்கத்தினால் மூடினார். இதுவே அதன் தனித்துவமான தோற்றதிற்கும் அதன் ஆங்கில பெயருக்கும் (Golden Temple) காரணமாகிறது.[4]

ஹரிமந்திர் சாஹிப் சீக்கியர்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப்,[6] எப்போதும் குருத்வாரா உள்ளே இருக்கும். இதன் கட்டுமானத்தின் முக்கிய நோக்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அனைத்து மதங்களையும் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சமமாக வந்து கடவுளை வழிபட ஒரு இடத்தை உருவாக்குவதாகும்.[7][6] 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.[8]

Remove ads

வரலாறு

ஹர்மந்திர் சாஹிப் என்றால் கடவுள் கோயில் என்று பொருள். பொ.ஊ. 1577 யில் சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராம் தாஸ், ஒரு குளத்தை தோண்டினார். பின்னர் அது அமிர்தசரஸ் ("அழியா தேன் குளம்" என்று பொருள்)[9] என அழைக்கப்படுகிறது. அதை சுற்றி வளர்ந்த நகரத்திற்கும் அதே பெயர் கொடுக்கப்பட்டது. பிற்காலத்தில், ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் ("கடவுளின் இல்லம்" என்று பொருள்),[10] இந்த தொட்டியின் நடுவில் கட்டப்பட்டது. மேலும் இது சீக்கியர்களின் உச்ச மையமாக ஆனது. அதன் கருவறையில் சீக்கிய குருக்கள் மற்றும் சீக்கிய தத்துவங்களை பின்பற்றிய மற்ற ஞானிகள், எ.கா., பாபா ஃபரித், மற்றும் கபீர் ஆகியோரின் பாடல்களை உள்ளடக்கிய தொகுப்பான ஆதி கிரந்த்தம் உள்ளது. ஆதி கிரந்த்தின் தொகுப்பு சீக்கியர்களின் ஐந்தாவது குருவான, குரு அர்ஜன் மூலம் தொடங்கப்பட்டது.

Remove ads

ஹர்மந்திர் சாஹிப் கட்டுமானம்

1574 ல் முதலில் கட்டப்பட்ட குருத்வாரா தளம் ஒரு மெல்லிய காட்டில் ஒரு சிறிய ஏரியால் சூழப்பட்டிருந்தது. அருகாமையில் உள்ள கோயிந்தவால் என்ற பகுதிக்கு வந்த மொகலாய பேரரசர் அக்பர், மூன்றாவது சீக்கிய குரு, குரு அமர் தாஸின் வாழ்க்கை வழிமுறையால் ஈர்க்கப்பட்டு சாகிர்(நிலம் மற்றும் பல கிராமங்களின் வருவாய்) கொடுத்தார். குரு ராம் தாஸ் அந்த ஏரியை விரிவுபடுத்தி அதை சுற்றி ஒரு சிறிய குடியிருப்பு கட்டினார்.

சில ஹர்மந்திர் சாஹிப் கட்டடக்கலை அம்சங்கள் சீக்கியர்களின் உலக கண்ணோட்டத்தை அடையாள படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது.[11]பொதுவாக குருத்வாரா உயர் நிலப்பகுதியில் கட்டப்படும். ஆனால் இந்த தங்கக்கோயிலோ அதை சுற்றியுள்ள நிலப்பகுதியை விட குறைந்த உயரத்தில் கட்டப்பட்டது. பக்தர்கள் அதனுள் நுழைய கீழே படிகள் இறங்கி போக வேண்டும்.[11] மேலும் ஒரு நுழைவிற்கு பதிலாக ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் நான்கு நுழைவாயில்கள் கொண்டுள்ளது.[11]

Remove ads

கொண்டாட்டங்கள்

மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் (வழக்கமாக 13ஆம் தேதி) கொண்டாடப்படும் வைசாகி ஆகும். குரு தேக் பகதூர் தியாக நாள் குரு நானக் பிறந்த போன்ற பிற முக்கிய சீக்கிய மத நாட்களும் கொண்டாடப்படுகிறது. இதேபோல் பந்தி சோர் திவாஸ் என்ற விழாவில் அழகாக விளக்குகள் ஏற்றப்பட்டு வானவேடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 3 ஜூன் 1984 இல் மேற்கொள்ளப்பட்டு, 1984 ஜூன் 6 ம் தேதி முடிவுக்கு வந்தது. ஜெனரல் குல்தீப் சிங் தலைமையிலான இந்திய இராணுவம், அனந்தபூர் சாஹிப் தீர்மானத்தை செயல்படுத்த ஆதரவு தெரிவித்த அமைதியான போராட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஹர்மந்திர் சாஹிப்பினுள் காலாட்படை, பீரங்கிப்படை, மற்றும் டாங்கிகளை கொண்டுவந்தது.

இந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போதைய பாரத பிரதமர் இந்திரா காந்தி புளூஸ்டார் நடவடிக்கை (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்) நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டார். ஆறு மாதங்களுக்குள் (31 அக்டோபர் 1984), இந்திரா காந்தி சீக்கிய மெய்க்காவலர்களல் இந்த நடவடிக்கைக்காக கொல்லப்பட்டார்.

Thumb
பொற்கோவிலும் அதன் சுற்றுப்புறமும்
Remove ads

விவாதமும் வன்முறையும்

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தியதி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை நடந்து 30 வருடம் ஆனதைக் குறித்து பொற்கோயிலினுள் சிரோண்மணி அகாலிதள் மற்றும் சிரோண்மனி குருத்துவாரா பிரபந்த கமிட்டியினரும் விவாதித்தனர். இதில் இதில் புளுஸ்டார் ஆப்ரேஷன் தொடர்பாக ஐ.நா., குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் பின் நடந்த சிறுவன்முறைச் சம்பவத்தில் இரு பிரிவினரும் கத்தி, ஈட்டி மற்றும் வாள் ஆகிய ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.[12] இத்தாக்குதலில் 12 பேர் காயமுற்றனர்.[13]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads