போடோ கலாச்சாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
போடோ கலாச்சாரம் (Boro culture) என்பது வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வாழும் போடோ பழங்குடியினரின் கலாச்சாரமாகும். நீண்ட காலமாக, போடோக்கள் விவசாயத்தில் ஈடுபடுபவர்களாக இருந்து வருகிறார்கள். [1] மீன்பிடி தொழில், கோழி வளர்ப்பு, பன்றி இறைச்சி, நெல் பயிரிடுதல், சணல் சாகுபடி , பாக்கு மரம் வளர்ப்பது போன்ற வலுவான பாரம்பரியத்துடன் இருந்து வருகிறார்கள். பாரம்பரிய உடைகள் போன்றே அவர்கள் தங்கள் ஆடைகளை புதிதாக உருவாக்குகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், பிரம்ம தர்மத்தின் கீழ் சமீபத்திய சமூக சீர்திருத்தங்களாலும், கிறிஸ்தவத்தின் பரவல் ஆகியவற்றாலும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Remove ads
மதம்
போடோக்கள் பத்தூயிசம், போரோ பிரம்ம தர்மம், சைவ சமயம் ஆகியவற்றைப் பின்பற்றுகிறார்கள். ஒரு சிலர், முக்கியமாக பாப்டிஸ்டுகள் கிறிஸ்தவத்தை கடைப்பிடிக்கின்றனர்.
இசையும் நடனமும்
பாகுரும்பா

போடோக்கள் பாரம்பரியமாக பாகுரும்பா என்ற நடனமாடுகின்றனர். இந்த நடனத்துடன் பாகுரும்பா பாடலும் இடம் பெறுகிறது. மேலும், இரணச்சண்டி, கோரை தப்ரைனை, தாவோ திவி லவ்ங்னாய், குவிஜெமா ஹன்னாய், மவ்சக்லாங்நாய் போன்ற சுமார் 15லிருந்து 18 வகையான கெராய் நடனங்கள் உள்ளன.
இசைக் கருவிகள்
காம், சிபுங், செர்ஜா, ஜோதா, ஜப்ஸ்ரிங், கவாங், பிங்கி, ரீஜ். போன்ற பல வேறுபட்ட இசைக்கருவிகளை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
சிபுங் : இது ஒரு நீண்ட மூங்கில் புல்லாங்குழல் ஆகும். இது வட இந்திய புல்லாங்குழலில் இருப்பது போலல்லாமல் ஆறு துளைக்களுக்கு பதிலாக ஐந்து துளைகளை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் அதை விட மிக நீளமானது. ஆனால் இது மிகவும் குறைந்த தொனியை உருவாக்குகிறது.
செர்ஜா : இது வயலின் போன்ற கருவியாகும். இது ஒரு வட்டமான உடலைக் கொண்டுள்ளது. மேலும் முன்னோக்கி வளைந்திருக்கும்.
கவாங் : இது மூங்கில் குச்சிகளைக் கொண்டு கைகளால் தட்டப்படும் இரண்டு பகுதிகளைக் கொண்ட ஒரு இசைக் கருவியாகும்.
காம் : இது மரம் மற்றும் ஆட்டின் தோலால் ஆன நீண்ட முரசாகும். [2]
Remove ads
உணவு
போடோ மக்கள் அரிசியை தங்களது முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். [3] மீன் அல்லது பன்றி இறைச்சி போன்ற அசைவ உணவுகளையும் உண்கிறார்கள்.
பண்டிகைகள்
பிவிசாகு
பிவிசாகு என்பது புத்தாண்டின் வருகையில் போடோ மக்களால் கொண்டாடப்படும் வசந்தகால விழாவாகும். எண்ணற்ற வண்ணங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் புகழ் பெற்ற இது ஏப்ரல் நடுப்பகுதியில் கொண்டாடப்படுகிறது. மக்கள் கொண்டாடும் மற்ற திருவிழாக்கள் ஹப்சா ஹதர்னை, வன்காம் குவர்ல்வி ஜனாய், டோமாஷி. அனைத்து கெராய் திருவிழாவிலும் பாடல், நடனம் மற்றும் முரசு ஆகியவையும் இணைந்தே மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன.
அரோனை

அரோனை என்பது ஒரு சிறிய தாவணியாகும். இதை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்துகிறார்கள். [4] அரோனாய் என்பது போரோ பாரம்பரியத்தின் அடையாளம் மற்றும் விருந்தினர்களை கௌரவிக்க, பரிசாக வழங்கப்படுகிறது. குளிர்காலத்தில் இதை உடலை சூடேற்றுவதற்காக கழுத்தில் சுற்றிக்கொள்கிறார்கள். பொதுவாக போரோ நடனத்தின் போது இது பயன்படுத்தப்படுகிறது. பண்டைய காலகட்டத்தில் போடோ வீரர்கள் அரோனாயை போர்க்களத்தில் ஒரு இடைக் கச்சையாக பயன்படுத்தினர். போரின் போது, போடோ பெண்கள் ஒரே இரவில் அரோனாயை நெசவு செய்து போர்க்களத்திற்கு புறப்படும்போது அதை வீரர்களுக்கு வழங்குவர்.
டோகோனா
டோகோனா என்பது போரோ பெண்களின் பாரம்பரிய உடையாகும். பொதுவாக டோகோனாவின் நீளம் 3 மீட்டர் (மீ) மற்றும் அகலம் 1.5 மீட்டர் (மீ) ஆகும், சில நேரங்களில் அது உடலின் உருவத்தைப் பொறுத்தது. இடுப்புக்கு மேல் ஒரு சுற்று உடுத்தியவதன் மூலம் முழு உடலையும் மார்பிலிருந்து கால்கள் வரை மறைக்க இது அணியப்படுகிறது. டோகோனாவில் அகோர் வகைகள் (வடிவமைப்பு) மற்றும் பல்வேறு வகையான வண்ணங்களால் நெசவு செய்யப்படுகின்றன.
Remove ads
போடோக்கள் கையால் செய்யப்படும் வடிவமைப்புகள்
போடோக்களைன் கையால் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வடிவமைப்புகள் உள்ளன. அவை எப்போதும் போடோ பாரம்பரிய உடைகளில் பிரதிபலிக்கும். போடோ நெசவாளர்களில் பெரும்பாலோர் கூறுகையில், போடோ பாரம்பரிய உடைகளில் ஹஜ் அகோர் மற்றும் பார்வோ மேகன் மிகவும் பொதுவான மற்றும் முக்கியமான வடிவமைப்பாகும். [5][6]
புகைப்படத் தொகுப்பு
- கெராய் குழு நடனம்
- போடோ ஆணும் பெண்ணும்
- போடோ ஆண்
- போடோ பெண்
- போடோ பெண்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads