மகாத்மா காந்தி விளையாட்டரங்கம்

தமிழ்நாட்டின் சேலத்திலுள்ள ஒரு விளையாட்டு அரங்கம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மகாத்மா காந்தி விளையாட்டரங்கம் (Mahatma Gandhi Stadium) என்பது தமிழ்நாட்டின் சேலத்திலுள்ள ஒரு விளையாட்டு அரங்கமாகும். 1973 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு துடுப்பாட்ட அணிக்கு எதிராக[1] விளையாடியதில் இருந்து இந்த அரங்கம் ஏழு முதல் தரப் போட்டிகளை[2] நடத்தியுள்ளது. 1992 ஆம் ஆண்டில் தமிழ்நாடு துடுப்பாட்ட அணி ஆந்திரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியபோது இந்த மைதானம் தனது கடைசி முதல் தர போட்டிகளை நடத்தியது.[3] இந்த விளையாட்டரங்கத்திற்கு மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் பெயரிடப்பட்டது.

விரைவான உண்மைகள் அரங்கத் தகவல், அமைவிடம் ...

இந்த மைதானம் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது கட்டப்பட்டதிலிருந்து எந்த புதுப்பித்தலும் செய்யப்படவில்லை என்பதால் மைதானத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் 2013 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு ரூ. 1 கோடியை அனுமதித்து அரங்கத்தை புதுப்பிக்க முடிவு செய்தது. அதில் ரூ. 60 லட்சம் 400 மீட்டர் தடகளப் பாதை, ஒரு கால்பந்து மைதானம், புல்வெளிகள் மற்றும் ஒரு நடைப்பயிற்சிப் பாதை ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் என்றும் மேலும் கைப்பந்து, கூடைப்பந்து மைதானங்கள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் எனவும் திட்டமிடப்பட்டது.[4][5][6]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads