மக்னீசியம் குரோமேட்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மக்னீசியம் குரோமேட்டு (Magnesium chromate) என்பது MgCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். வெண்மை அல்லது பழுப்பு நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் நெடியற்ற திண்மமாக உள்ளது. தண்ணீரில் கரையக்கூடிய இச்சேர்மம் பல்வேறு வகையான முக்கிய தொழிற்சாலைப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இயற்கையில் மக்னீசியம் குரோமேட்டு சிபினல் படிக அமைப்புடன் தோன்றுகிறது அல்லது பெருமளவில் துகளாகத் தயாரிக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் பண்புகள் ...
Remove ads

வரலாறு

1940 ஆம் ஆண்டுக்கு முன், மக்னீசியம் குரோமேட்டு மற்றும் அதன் நீரேற்றுகள் பற்றிய கருத்துகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஆனால் இந்த வருடத்திலிருந்து தொடங்கப்பட்ட ஆய்வுகள் அதன் பண்புகள் மற்றும் கரையும் தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தின[1]

பயன்கள்

நீரற்ற அல்லது நீரேற்று வடிவ மக்னீசியம் குரோமேட்டுகள் வணிகரீதியாக நுண்ணிய மைக்ரான் அளவில் இருந்து மீநுண்ணிய அளவுகள் வரை பலவகைகளில் கிடைக்கிறது[2][3].

ஒரு நீரேற்றாக இது அரிமாணத் தடுப்பி மற்றும் சாயமாகவும்[4] அல்லது அழகுசாதனப் பொருட்களில் [5]பகுதிப்பொருளாகவும் பயன்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் 11 நீர் மூலக்கூறுகள் கொண்ட இச்சேர்மத்தின் பதினொருநீரேற்று பல்கலைக்கழகக் கல்லூரி இலண்டனில் கண்டறியப்பட்டது[6].

Remove ads

தீங்குகள்

நோய் தீர்க்கும் பயன்கள் ஏதுமில்லாததால் மக்னீசியம் குரோமேட்டு நீரேற்று அறை வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்[7]. இதுவொரு புற்றுநோய் ஊக்கியாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. கடுமையான தோலழற்சியும் உடலுக்குள் ஈர்க்கப்பட்டால் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் சேதம் ஏற்படுத்தும் சாத்தியங்கள் கொண்டுள்ளது. எனவே இதை ஒரு அபாயகரமான கழிவு எனக் கருத வேண்டும்[8].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads