மஞ்சள் பத்திரிகை
நக்கீரன் மஞ்சள் பத்திரிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்சள் பத்திரிகை அல்லது மஞ்சள் இதழ் என்பது பெருமளவாகவோ முழுதாகவோ பொய் கலந்த செய்தியுடன், வெறும் கவர்ச்சிக்காகத் தலைப்பிட்டு இலாபம் ஈட்டும் நோக்கோடு வெளிவரும் ஒரு வகையான இதழாகும். இதனை நச்சு இதழ் என வகைப்படுத்துகிறார்கள். பொதுவாக மிகைப்படுத்திய செய்திகள், புரட்டான செய்திகள், கிளர்ச்சியூட்டும் செய்திகள் கொண்டவையாகயிருக்கும்.[1]
ப்ராங்க் லூத்தர் மோட் (1941) வரையறையின்படி மஞ்சள் இதழின் ஐந்து பண்புகள் பின்வருமாறு[2]:
- சிறிய செய்தியாக இருந்தாலும் அச்சுறுத்தும் பெரிய தலைப்பிடல்
- படங்களையும் வரைபடங்களையும் பகட்டாக வெளியிடல்
- போலி வல்லுநர்கள் மூலம் போலியான நேர்காணல்கள், தவறான தலைப்பு, போலி அறிவியல், தவறான தகவல்களிடல்
- நகைப்பூட்டும் பட்டைகளுடன் முழு வண்ண ஞாயிறு சேர்க்கைகள்
- அமைப்புக்கு எதிராகப் போராடித் தோல்வியுற்றவர் மூலம் அனுதாபம் ஈட்டல்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads