மட்டக்களப்புக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மட்டக்களப்புக் கோட்டை அல்லது மட்டக்களப்பு இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) அல்லது மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது.[1] இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல்லாந்துக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பு தீவுகளில் ஒன்றான புளியத்தீவில் அமைந்துள்ள இது, இன்னும் பழுதடையாமல் காணப்படுகிறது.
Remove ads
காலவரிசை
ஐரோப்பியர் கால மட்டக்களப்புக் கோட்டையின் காலவரிசை.[2]
- 1622 – போர்த்துக்கேயரால் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது
- 1628 – கட்டுமானம் நிறைவுற்றது
- 1638 – ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது
- 1639 – ஒல்லாந்தரால் கோட்டை அழிக்கப்பட்டது
- 1665 – மீள் கட்டுமானம் ஆரம்பமாகியது
- 1682 – செப்பணிடப்பட்டது
- 1707 – முன் கொத்தளமும் மேற்பகுதியும் கட்டி முடிக்கப்பட்டது
- 1766 – கண்டிய அரசுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது
- 1796 – பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது
Remove ads
படங்கள்
- மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை
- மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டை, 1672
- மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டை நுழைவாயிலிலுள்ள பழைய பீரங்கிகளில் ஒன்று
- மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டையிலுள்ள பீரங்கி. தூரத்தில் காவல் கோபுரம் தெரிகிறது
இவற்றையும் காண்க
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads