மண்தாலே பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மண்தாலே பிரதேசம் முன்னர் மண்தாலேப் பகுதி மியான்மரின் ஒரு நிர்வாக பிரிவுப் பிராந்தியமாகும். இது நாட்டின் மையத்தில் அமைந்துள்ளது, மேற்கில் சாகிங் பகுதியையும், மகவே பகுதியையும், கிழக்கில் ஷான் மாநிலம், மற்றும் பகோ பகுதியையும் மற்றும் காயின் மாநிலத்தை தெற்கில் எல்லைகளாக அமைந்துள்ளது. இந்தப் பிரதேசத்தின் தலைநகரம் மண்தாலே ஆகும். இந்தப் பிராந்தியத்தில் நிர்வாக வசதிக்காக ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இவை மேலும் உட்பிரிவுகளாக 30 நகரங்கள் மற்றும் 2,320 வார்டுகள் மற்றும் கிராமப் பகுதிகளை கொண்டுள்ளது.
மியான்மரின் பொருளாதாரத்தில் மண்தாலே மாநிலத்தின் பங்கு முக்கியமானது, இது தேசிய பொருளாதாரத்தில் 15% பங்களிக்கிறது. மண்தாலே பிரதேச அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
Remove ads
வரலாறு
மண்தாலே மாநிலத்தின் வரலாறு என்பது பர்மிய வரலாற்றின் பெரும்பகுதியை தவிர மேல் மியான்மார் வரலாற்றுடன் ஒத்ததாக உள்ளது. மண்தாலே பிரதேசத்தில் இருந்து தான் பர்மிய முழுவதம் ஆதிக்கம் செலுத்தக் கூடிய அரசியல் ஆதிக்கம் நிறைந்த தலைநகரமாக தோன்றியது. தற்போதைய நாட்டின் தலைநகரம், நய்பிடா, மற்றும் பர்மாவின் முன்னாள் அரச தலைநகரங்களான அவா, அமராபுரா, மண்டலை போன்ற பர்மிய நகரங்கள் இங்கு உள்ளன.
திபெத்திய-பர்மிய் பயு பேசும் மக்கள் கிமு முதலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மண்தாலே பகுதியை உள்ளடக்கிய மத்திய மியான்மரின் வறண்ட பகுதிகளை ஆதிக்கம் செலுத்திய முதல் வரலாற்று மக்கள். 9 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், யுன்னான் பகுதியில் இருந்து வந்த நான்சோ இராச்சியம் ஒரு தொடர் போர்களில் மூலம் பயு இன மக்கள் அழிக்கப்பட்டனர். 9 ஆம் நூற்றாண்டில் யுன்னானில் இருந்து வந்து இப்பகுதியில் குடியேறிய பர்மயர்கள், கிமு 849 ஆம் ஆண்டில் தங்கள் சொந்த நகரமான பகன் நகரத்தை நிறுவினர். பகன் வம்சாவழியினர் படிப்படியாக அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் மியான்மரின் மைய மண்டலத்தை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர், சுமார் 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இன்றைய மியான்மர் முழுவதுமே அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. பகன் மன்னர்களின் ஆதரவுடன் பர்மிய மொழி மற்றும் எழுத்துக்கள் பெரும் ஆதரவையும் வளர்ச்சியும் பெற்றது.
கிமு 1287 ஆம் ஆண்டில் பகன் இராச்சியம் மங்கோலியர்கள் வசம் வீழ்ச்சியடைந்தது. பின்னர் மத்திய மியான்மரின் சில பகுதிகள் தொடர்ச்சியாக பல ஆட்சியாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டன: மங்கோலியர்கள் (1287-c.1303), மயின்சாங் (1298-1313), பின்யா (1313-1364), மற்றும் சாகாங் (1315-1364). கிமு 1364 ஆம் ஆண்டில், பர்மிய ஷான் வம்ச மன்னர்களால் தலைமை தாங்கப்பட்ட அவா இராச்சியம் அனைத்து மத்திய மியன்மாரையும் ஒருங்கிணைத்தது. மத்திய மியான்மர் கிமு 1527 வரை அவாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, மற்றும் மோன்ஹின் (1527-1555) ஷான்ஸ் கீழும் இருந்தது. பர்மிய இலக்கியம் மற்றும் கலாச்சாரம் இந்த சகாப்தத்தில் வளர்ந்தது. மத்திய மியான்மர் கிமு 1555 முதல் 1752 வரை தாங்கோ இராச்சியத்தின் பகுதியாக இருந்தது. இப்பகுதியின் சில பகுதிகள் பெகு (பெகுவின் மோன்ஸ்) (1752-1753) வீழ்ந்தது. திசம்பர் 1885 வரை மூன்றாவது ஆங்கில-பர்மிய போரில் அப்போதைய மேல்ப் பகுதி மியான்மர் எல்லையை இழந்தபோது கோன்பாங் வம்சம் இப்பகுதியை ஆட்சி செய்தது.
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
மண்தாலே மாநிலத்தில் உள்ள 31 நகரங்களும் நிர்வாக வசதிக்காக கீழ்வரும் ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
- கயாக்சி மாவட்டம்
- மண்தாலே மாவட்டம்
- மீகிடிலா மாவட்டம்
- மயிங்யன் மாவட்டம்
- நயாங்-யு மாவட்டம்
- பயின் ஓ லவின் மாவட்டம்
- யமிதின் மாவட்டம்
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads