மதராசு சமசுகிருதக் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மதராசு சமசுகிருதக் கல்லூரி (Madras Sanskrit College), சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் சமசுகிருதக் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி 1906ஆம் ஆண்டில் சிறந்த சட்ட நிபுணரும் பரோபகாரருமான வி. கிருஷ்ணசுவாமி ஐயரால் நிறுவப்பட்டது. 2017ஆம் ஆண்டில், இணையவழி சமசுகிருதத்தைப் பரப்புவதற்கும் கற்பிப்பதற்கும் கல்லூரி தனது எண்ணிம வளாகத்தைத் தொடங்கியுள்ளது.[2][3][4][5][6]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Remove ads

கல்வித் திட்டங்கள்

கல்லூரியின் முதன்மைத் திட்டங்கள் சமசுகிருத பிராக்-சிரோமணி (அடிப்படை படிப்பு), சமசுகிருத சிரோமணி மத்யமா (இளங்கலை) மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த சமசுகிருத சிரோமணி (முதுகலை) ஆகியவை தேர்வு அடிப்படையிலான பாட முறையின் நடைமுறை படுத்தப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்குக் கல்லூரி விதிப்படி கல்விக் கட்டணம் வசூலிப்பதில்லை. சமசுகிருதத்தில் பட்டயப்படுப்பு மற்றும் பகுதி நேரச் சான்றிதழ் படிப்புகளையும் வழங்குகிறது.[4]

Remove ads

ஆராய்ச்சி

மதராசு சமசுகிருதக் கல்லூரி பல்வேறு இந்து நூல்கள், இந்தியவியல், சமசுகிருத இலக்கணம் மற்றும் வேதங்களை ஆய்வு செய்து வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் திட்டங்களை வழங்குகிறது. ஆய்வு மாணவர்களின் தேர்வு சென்னைப் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி நடைபெறுகிறது. 1944-ல் நிறுவப்பட்ட குப்புசுவாமி சாசுதிரி ஆராய்ச்சி நிறுவனமும் இதே வளாகத்தில் அமைந்துள்ளது.[7][8][9]

மேலும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads