மத்திய கிழக்கு மூச்சுக் கூட்டறிகுறி

From Wikipedia, the free encyclopedia

மத்திய கிழக்கு மூச்சுக் கூட்டறிகுறி
Remove ads

மத்தியகிழக்கு சுவாச நோய்க்குறி (அ)மெர்ஸ் நோய் (Middle East respiratory syndrome, MERS) என்பது புதிதாகக் கண்டறியப்பட்ட ஒருவகை கொனோரா (MERS-CoV) வகைத் தீநுண்மங்களால் ஏற்படுத்தப்படும் சுவாசத் தொற்று நோயாகும். இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையீரல் ஒவ்வாமை மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.[1].

விரைவான உண்மைகள் MERS-CoV, தீநுண்ம வகைப்பாடு ...

இத்தீநுண்மங்கள் வௌவால்களில் இருந்து வந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. ஒட்டகங்களிலும் இத்தகைய தீநுண்மங்களுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகள்கள் காணப்பட்டதாக அறியப்பட்டுள்ளது. ஒட்டகங்கள் மூலம் பரவும் இந்த ஆட்கொல்லி நோய்க்கான வைரஸ் கிருமிகள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சவுதி அரேபியாவில் கண்டறியப்பட்டது.[2]. ஆயினும் நோய்த்தாக்கத்திற்குட்பட்ட ஒட்டகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது தென் கொரியாவில் இந்நோயினால் தாக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 147 நபர்களுக்கு இந்நோயின் அறிகுறி காணப்பட்டுள்ளது.[3]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads