மன்னர் மானியம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மன்னர் மானியம் (Privy Purse in India) என்பது இந்திய விடுதலைக்கு முன்பு பிரித்தானிவின் இந்தியப் பேரரசின் கீழ், சுதேச சமஸ்தான மன்னர்களுக்கும், அவர்தம் வாரிசுகளுக்கும், இந்தியப் பிரிவினைக்குப்பின் இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்ட உதவித் தொகையாகும்.

.
மன்னர் மானியம் எனும் உதவித் தொகை வழங்குவது, இந்திய அரசியலமைப்பில் செய்த 26வது திருத்தத்தை, 1971ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றிய பின்னர், இந்திய அரசால் நிறுத்தப்பட்டது.[1]
Remove ads
வரலாறு
இந்திய விடுதலைக்கு முன்னர் 1947இல் 560 சுதேச சமஸ்தானங்கள் ஆங்கிலேயே அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்திக் கொண்டு, தத்தம் பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்தன. அவற்றில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானமும் ஒன்றாகும். 15 ஆகஸ்டு 1947இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் அனைத்து சுதேச சமஸ்தானங்களின் ஆட்சிப் பகுதிகள் இந்திய அரசின் கீழ் இணைந்தன.
தங்கள் ஆளும் பகுதியை இந்தியாவுடன் இணைத்தமைக்காக 565 சுதேச மன்னர்களுக்கு மானியத்தொகையாக இந்திய அரசு ஆண்டுதோறும் ரூபாய் 5000 முதல் இரண்டு இலட்சம் வரை வழங்கப்பட்டது. பெரிய சுதேச மன்னர்களாக ஹைதராபாத் நிஜாம், மைசூர், திருவாங்கூர், பரோடா, ஜெய்பூர் மற்றும் பாட்டியால மன்னர்களுக்கு பத்து இலட்சம் ரூபாய் வரை மன்னர் மானியம் வழங்கப்பட்டது.
Remove ads
ஒழிப்பு
1969இல் மன்னர் மானிய ஒழிப்பு சட்ட மசோதா அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த போது ஒரு வாக்கு வித்தியாசத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோற்றது.[2] இந்திய அரசியல் அமைப்பு (26வது திருத்தம்) சட்டம், 1971 (The Constitution (Twenty-sixth Amendment) Act, 1971) 1971இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டதால் இந்திய அரசு மன்னர் மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டது. [3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads