மரப்பாச்சி பொம்மைகள்

குழந்தைகள் விளையாடும் மரத்தாலான பொம்மைகள் From Wikipedia, the free encyclopedia

மரப்பாச்சி பொம்மைகள்
Remove ads

மரப்பாச்சி பொம்மைகள் (Marapachi Dolls) என்பன தென்னிந்தியாவில் நவராத்திரி பண்டிகையின் போது கொலுவில் வைக்கப்படும் மரப்பொம்மைகள் ஆகும். இவை குறிப்பாக செஞ்சந்தன மரம், முள்ளிலவு மரம், ஊசியிலை மரம் போன்றவற்றால் செய்யப்படும் பாரம்பரிய பொம்மைகள் ஆகும். இவை  பொதுவாக ஆண் மற்றும் பெண் நிர்வாண வடிவில் ஜோடிகளாக செய்யப்பட்ட பொம்மைகள் ஆகும். இந்த இணை பொம்மைகள் நவராத்திரி கொலுவின்போது அலங்கரித்து வைக்கப்படும். இவை சிறப்பாக செதுக்கப்படும் இடங்களில் திருப்பதியும் ஒன்றாகும். திருப்பதியில் இந்த பொம்மைகள் ஏழுமலையானையும் அவரது துணைவியாரையும் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறப்படுகிறது.[1][2][3] இவை கொண்டப்பள்ளியில் ராஜா ராணி பொம்மையாகவும் செய்யப்பட்டு தவறாமல் கொலுவில் வைக்கப்படுகின்றன.[4]

Thumb
ராஜா ராணி மரப்பாச்சி பொம்மைகள்

மரப்பாச்சி பொம்மைகள் பாரம்பரியமாக தாயிடமிருந்து மகளுக்கு சீதனமாக வழங்கப்பட்டு, அதைக்கொண்டு மகள் தன் வீட்டில் பொம்மை கொலு வைப்பது வழக்கம்.[5] தென்னிந்தியாவில் பின்பற்றப்படும் ஒரு குறிப்பிட்ட பழக்கமானது, புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு மராபாச்சி பொம்மைகளை பரிசாக அளிப்பதாகும். குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கப்படும் செஞ்சந்தன மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் மருத்துவ தன்மையுடன் விளங்குவதாக கருதப்படுகின்றன. குழந்தைகள் அவற்றை வாயில் வைத்து சப்பும்போது அதன் மருத்துவ குணங்கள் உடலுக்கு நன்மை செய்வதாக நம்புகின்றனர்.[6]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads