மரியன் கோஷ்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

மரியன் கோஷ்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம்map
Remove ads

மரியன் கோஷ்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம் (Marian Koshland Science Museum) அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் (NAS) பராமரிப்பில் வாஷிங்டன், டிசி யில் 2004 [1] ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு மூடப்பட்டது. பொதுமக்களுக்கு ஏற்ற வகையில், நவீன அறிவியல் மற்றும் அறிவியல் சிக்கல்களை எளிதாக அணுகக்கூடிய வகையில், காட்சிப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருந்தன. இது அமெரிக்காவின் தேசிய அகாடமிகளின் அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட, தேசிய மற்றும் உலகின் பொதுக் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப, அறிவியல் சிக்கல்களை ஆராய்ந்தது. தேசிய அறிவியல் அகாடமியின் அருங்காட்சியகம் லேப்எக்ஸாக (LabX) மாறியது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, கலைக்கப்பட்டது ...
Remove ads

கண்காட்சி வளர்ச்சி

கோஷ்லாண்ட் அறிவியல் அருங்காட்சியகம் தேசிய அறிவியல் அகாடமியின் ஒரு பகுதியாக இருந்தது. அருங்காட்சியகத்தை மேம்படுத்த அறிவியல் வல்லுநர்கள் குழுவாக இணைந்து செயல்பட்டனர். இந்த வல்லுநர்களின் குழுக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கண்காட்சி கூடங்கள் (Galleries) உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு காட்சிப் பொருளுக்கும் ஒரு அறிவியல் வழிகாட்டுதல் குழுவோ துறை சார்ந்த வல்லுநர் குழுவோ மேற்பார்வையிட்டு வழிகாட்டியது. அருங்காட்சியகப் பணியாளர்களின் முக்கியக் குழு, மேம்பாடு மற்றும் புனையமைப்பு உட்பட காட்சிப்பொருட்களுக்கான தேர்வின் அனைத்து அம்சங்களையும் எளிதாக்கியது. இந்த அருங்காட்சியகம் தனிப்பட்ட முறையில், நேர்முகமாகவோ அல்லது இணைய இயங்கலை வாயிலாகவோ, ஆலோசனைக் குழுக்களிடமிருந்து உள்ளீட்டைப் (Input) பெற்றது. இந்த அருங்காட்சியகத்தில் மூலோபாய திட்டமிடலில் அருங்காட்சியக ஆலோசனைக் குழுவும் ஈடுபட்டிருந்தது.

இந்த அருங்காட்சியகம் இரண்டு முதன்மை காட்சிப்பொருட்களை மையமாகக் கொண்டது: "புவி ஆய்வகம்" (Earth Lab), இது காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது; "வாழ்க்கை ஆய்வகம்" (Life Lab) கற்றல், முதுமை, ஊட்டச்சத்து மற்றும் தொற்று நோய்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்த அருங்காட்சியகத்தில் "அறிவியல் அதிசயங்கள்" என்ற பிரிவு ஊடாடத்தக்க காட்சிப் பொருட்களுக்கான (interactive exhibits) செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

Remove ads

அருங்காட்சியகத்தின் தோற்றம்

ஏப்ரல் 2004 ஆம் தேதி தொடங்கப்பட்ட மரியன் கோஷ்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகத்திற்கு, மரியன் கோஷ்லேண்ட் என்பவரின் பெயரிடப்பட்டது. இவர் நோய் எதிர்ப்பு சக்தி வல்லுநரும் மூலக்கூறு உயிரியலாளரும் ஆவார். இவர் ஆன்டிபாடிகளின் நடத்தையில் அற்புதமான ஆய்வுகளை மேற்கொண்டார். இவரது கணவர் டேனியல் கோஷ்லேண்ட் என்சைம்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பற்றிய ஆய்வில் வல்லமை பெற்ற ஒரு மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். இவர்கள் அளித்த நன்கொடையின் விளைவாக இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. எலைட் லிபரல் ஆர்ட்ஸ் கல்லூரி, ஹேவர்ஃபோர்ட் கல்லூரியில் உள்ள மரியன் கோஷ்லேண்ட் ஒருங்கிணைந்த இயற்கை அறிவியல் மையத்துடன் அருங்காட்சியகம் தன் பெயரைப் பகிர்ந்து கொண்டது.

Remove ads

இடம்

இந்த அருங்காட்சியகம் 525 E தெரு, NW இல் அமைந்துள்ளது. அருங்காட்சியக நுழைவு வாயில் வாஷிங்டன், டிசி யின் பென் குவார்ட்டர் பகுதியின் 6வது மற்றும் E தெருக்கள், NW சந்திப்பில் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads