மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் ஆராய்ச்சி இயக்ககம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள் ஆராய்ச்சி இயக்ககம் (Directorate of Medicinal and Aromatic Plants Research) என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தால் நிறுவப்பட்ட 25 திட்ட இயக்குநரகங்களில் ஒன்றாகும். இது மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களின் தரமான உற்பத்தி, புதிய ரகங்களை மேம்படுத்துதல் மற்றும் விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக குசராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போரியாவியில் 24 நவம்பர் 1992 அன்று தேசிய ஆராய்ச்சி மையமாக நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய ஆய்வுப் பயிர்களாகச் சோற்றுக்கற்றாழை (ஆலோ பார்பாடென்சிசு), அமுக்கிரா (வித்தானியா சோம்னிபெரா), பிளாண்டாகோ ஓவாட்டா, சைம்போகான் லிளக்சோசு, தைலப்புல் (சைம்போகான் மர்தினீ), குளோரோபைதம் போர்விலேரம் மற்றும் நிலாவாரை (காசியா அன்குசுடிபோலியா) உள்ளன.
இந்த நிறுவனம் பயன்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. பல்வேறு மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களில் ஆய்வு மேற்கொள்ள நாடு முழுவதும் 23 மையங்களின் ஆராய்ச்சிப் பணிகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கிறது. இதன் மூலம் 26 வகையான மருத்துவ தாவரங்களையும், ஏழு வகையான நறுமண தாவரங்களையும் வெளியிட்டுள்ளது.[1] இந்நிறுவன கள மரபணு வங்கியில் 830 மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் மூலவுயிர்முதலுருவினை பராமரித்து வருகிறது. [2]
இந்நிறுவனத்தில் இந்திய மருத்துவ மற்றும் வாசனை தாவரவியலாளர் சங்கம் அமைந்துள்ளது. மேலும் மருத்துவ மற்றும் வாசனை தாவரங்கள் குறித்த திறந்த அணுகல் கொண்ட ஆய்விதழினை வெளியிட்டுவருகின்றது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads